வல்லமையுள்ள ஜெயவீரர் Dallas, Texas, USA 58-0610 1நன்றி, இன்றிரவு மறுபடியும் இந்த பெரிய கூடாரத்தில் அவருடைய நாமத்தில் ஊழியம் செய்யும் படிக்குஇங்கே வந்திருப்பது ஒரு பெரிய சிலாக்கியமாக உள்ளது. இப்பொழுது, நாம் அவருடைய வார்த்தையை வாசிப்பதற்கு முன்னர், ஜெபத்தில் சற்று அவருடன் கூட பேசுவோம். நாம் தலைகளை தாழ்த்துவோம். கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து திரும்பவும் உயிர்த்தெழச் செய்த நித்திய தேவனே, எங்களுடைய அநேக அக்கிரமங்களை நீர் எங்களுக்கு மன்னித்து, உம்முடைய ஆவியானவர் தாமே இன்றிரவு எங்களிடத்தில் மகத்தான அளவில் ஊற்றப்படும்படிக்கும், பாவிகள் இன்றிரவு இங்கிருந்து திரும்பிச் செல்லும்போது, உணர்வடைந்தவர்களாய் அழுத வண்ணம் திரும்பிச் செல்லவும், வியாதியஸ்தர்கள் சுகமடையும்படிக்கும், ஜீவனுள்ள தேவனுடைய மகத்தான அடையாளங்கள் இன்றிரவு இந்த கூடாரத்தின் கீழாக செய்யப்படட்டும். இதை அளியும், தேவனே. இது உம்முடைய வார்த்தை, இதை நாங்கள் வாசிக்க இருக்கிறோம் மற்றும் பரிசுத்த ஆவியானவரைத் தவிர இதை ஒருவரும் வியாக்கியானிக்க முடியாது. பேசப்போகிற வார்த்தைக்கான பொருளை அவர் கொடுக்கும்படிக்கு நாங்கள் ஜெபிக்கிறோம். இதை அளியும் கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். 2தேவனுடைய வார்த்தையை நான் அவ்வளவாக நேசிக்கிறேன். அதை வாசிப்பதை நான் விரும்புகிறேன். அதைக் குறித்து ஒரு விசேஷ காரியம் இருக்கிறது. அது அவர் நித்தியமானவர் என்பதை குறித்து வாசிப்பதை நாம் பார்க்கும்போது அது நம்மை அவ்வளவாக மெய் சிலிர்க்கச் செய்கிறது. அவர் நித்தியமானவராக இருப்பது போல அவருடைய வார்த்தையும் நித்தியமானதாக இருக்கிறது. எந்த மனுஷனும் அவருடைய வார்த்தையைக் காட்டிலும் மேலானவன் அல்ல. நான் உங்களுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில், உங்களுக்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தம் இல்லை. நீங்கள் என்னுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளாமல், என்னை நம்பவும் முடியாது. நாம் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளும்போது, அவர் கூறினது உண்மை என்று நம்மால் நம்ப முடியும். அவருடைய வார்த்தையை நாம் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், அவரே வார்த்தை என்று தேவன் நமக்கு வெளிப்படுத்தும் வரைக்கும் நாம் சென்று, ஜெபத்தில் தரித்திருக்க வேண்டிய நேரம் அதுவே. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாய் இருக்கிறது'. 3இப்பொழுது, இந்த இரவில் வெளிப்படுத்தின புத்தகத்தில் 6-ம்அதிகாரம் 2-ம்வசனத்தை வாசிக்க இருக்கிறோம். நான் பார்த்தபோது இதே, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்; அதின் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான், அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். அதை இவ்வழியில் குறிப்பிடப்பட வேண்டுமானால், “இவரே வல்லமையுள்ள ஜெயவீரர்” (The Mighty Conqueror) என்று அழைக்கப்படவேண்டும் என நான் விரும்புகிறேன். 4சில நாட்களுக்கு முன்பு போர்த்துகீஸில் உள்ள லிஸ்பன் (Lisbon) என்னும் இடத்தில் நிற்கும்படிக்கான சிலாக்கியம் எனக்கு கிடைத்தது, அங்கே போர்க் கைதிகளையும், அடிமைகளையும் வைத்திருக்கும் இடத்திற்குச் சென்றேன். அவ்விடத்தில் ஒருவகையான உலோகத்தில் ஒரு படம் செதுக்கப்பட்டிருந்தது, அது ஒரு மனிதனுடைய படமாயிருந்தது, அவன் ஒரு புகழ்பெற்ற போர்வீரன். அவன் ஒரு வீரன், ஏனெனில் அவன் பெரிய பட்டணத்தை கைப்பற்றினான். அவன் ஒரு துருக்கியன். அதற்குப் பிறகு இன்னொரு மனிதன் வந்து இந்த மதிலண்டை தன்னுடைய ஜீவனை விட்டான். அவன் ஒரு வீரன், ஜெயவீரன். அவன் ஒரு வீரனாக தன் ஜீவனை கொடுத்து இந்த மதில்களை தகர்த்தெறிந்து, துருக்கியர்களிடத்திலிருந்து இதை கைப்பற்றினான், அதன் பின்னர் ஸ்பானியர்கள் இதை கைப்பற்றிக் கொண்டார்கள். இந்த உலகமானது வீரர்களாலும், ஜெய வீரர்களாலும் இன்னும் அப்படிப்பட்டவர் களால் நிறைந்ததாய் இருக்கிறது. இன்றிரவு நான் கான்ஸ்டன்டைனைக் (Constantine) குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன். தலை சிறந்த போர்வீரனான அவன் ரோமை கைப்பற்றும்படிக்கு அதை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். ஆனால் அதே சமயத்தில் அங்கே செல்வதைக்குறித்து சற்று கலக்கமுடையவனாகவும் இருந்தான். ஒரு இரவு அவன் உறக்கத்தில் இருந்தபோது, அவனுக்கு முன்பாக ஒரு வெள்ளை சிலுவை தோன்றினதைக் குறித்து ஒரு சொப்பணம் கண்டான். அந்த சொப்பணத்தில், “இதைக் கொண்டு, நீ மேற்கொள்வாய்'' என்று ஒரு சத்தம் அவனிடத்தில் பேசினது. உடனே அந்த நடுஇரவிலே அவனுடைய எல்லா போர் வீரர்களையும் அவன் எழுப்பி, அவர்களுடைய கேடகத்தில் வெள்ளை வர்ணத்தில் சிலுவையைவரையச் செய்தான். ஏனெனில் அதைக் கொண்டு அவர்கள் போரில் மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது. 5ஆம், உண்மையிலேயே எந்த ஒரு காரியத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டுமானால், அதுதாமே சிலுவையின் மூலமாக வரவேண்டியதாய் இருக்கிறது. மேலும் மேற்கொள்ளக்கூடிய வழி ஒன்று இருக்குமானால், அதுதாமே சிலுவையின் மூலமாக இருக்கிறது. கான்ஸ்டன்டைன் ஒரு தலை சிறந்த மனிதன் என்று நம்மெல்லாருக்கும் தெரியும். இருப்பினும் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பாக அதைக் குறித்து நாங்கள் மறுபடியும் சிந்தித்துக் கொண்டிருந்தோம். ஜெர்மனியில் அங்கே தாமே தேவன் எங்களுக்கு ஒரு பெரிய கூட்டத்தை நடத்தும்படிச் செய்தார். பின்னர் அங்கிருந்து நான் திரும்புகையில், பிரஸ்ஸல்சில் (Brussels) நாங்கள் நிற்க வேண்டியதாய் இருந்தது. (அங்கிருந்து நாங்கள் வாட்டர்லூவுக்கு (waterloo) அதிக தூரத்தில் இல்லை. அநேக வருடங்களுக்கு முன்னர் வாட்டர்லூவில்) நடந்த பெரிய யுத்தங்களில் மகத்தான நெப்போலியன் தோற்க்கடிக்கப்பட்ட இடமாகிய வாட்டர்லூவில் உள்ள போர் நினைவு சின்னங்களையும், மற்ற சிலைகளையும் குறித்ததானவைகளை அங்கிருந்தவர்கள் எங்களிடத்தில் கூறிக் கொண்டிருந்தனர். நெப்போலியன், நம்மெல்லாரும் அறிந்தபடி அவன் ஒரு மாபெரும் மனிதன், இருப்பினும் அவன் வாலிபனாக இருந்தபோது நல்ல பாதையில் பயணிக்க துவங்கினான். முப்பத்திமூன்று வயதில் உலகமுழுவதும் ஜெயித்த அவன், உலகத்திலிருக்கிற எல்லா தேசங்களிலும் இருக்கிற ஒவ்வொரு வரையும் ஜெயித்த பின், அவன் உட்கார்ந்து அழத் தொடங்கினான். ஏனெனில் அதற்கு மேல் அவனுக்கு ஜெயிப்பதற்கு ஒருவருமில்லை . அதேசமயத்தில் அவன் குடிக்கு அடிமையாகி குறுகிய வயதிலேயே மரித்துப் போனான். ஆரம்பத்தில் அவன் மதுவிலக்கு கொள்கையுடையவனாக இருந்தான், ஆனால் அவன் மரிக்கும்போது குடிக்கு அடிமையானவனாக மரித்தான். உலகம் அவனைக் கண்டு அவ்வளவாக அஞ்சியது. 6நான் விமான நிலையத்திலிருந்தபோது, ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். அதில், பெண்கள் தங்கள் பிள்ளைகளை தூங்கவைக்க படுக்கைக்கு செல்லும் போது, அநேக தாய்மார்கள் அப்பிள்ளைகளிடத்தில், “நீ தூங்கவில்லையென்றால் அந்த பெரிய பூச்சாண்டிக்காரன் வந்து உன்னை பிடித்து போவான்' என்பார்கள். மேலும் அவர்கள் தங்கள் பிள்ளைகளை அதிகப்படியாக பயமுறுத்தும்படிக்கு நீ தூங்கவில்லையென் றால் நெப்போலியன் வந்து உங்களை பிடித்துக்கொண்டு போய்விடுவான் என்பார்கள். காரணம், அவன் அவ்வளவு கொடிய கொலைகாரனாயிருந்தான். உடனே அந்த சிறு பிள்ளைகள் தங்கள் கண்களை விழிபிதுங்க பார்த்துவிட்டு, அவ்வளவு சீக்கிரமாக போர்வையை போர்த்திக் கொண்டு உறங்கிவிடுவார்கள், ஏனெனில் அந்த கொடூரமான நெப்போலியன் வந்து தங்களை பிடித்துக்கொள்வான் என்று பயந்தார்கள். ஆனால் அவன் போட்டியின் சட்டவிதிகளின்படி சரியாக விளையாட வில்லை . எனவே, இதை நினைவில் கொள்ளுங்கள், இதுதாமே ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கிறது. எப்படியெனில் நாம் தாமே போட்டியை சட்டவிதியின்படி விளையாடாத பட்சத்தில், முடிவில் நாம் தகுதி நீக்கம் செய்யப்படு வோம். எனவே ஜெயிக்க வேண்டுமானால் நீங்கள் போட்டியின் சட்ட விதிகளை கடைபிடிக்க வேண்டியதாயிருக்கிறது. எனவே, கிறிஸ்துவினிடத்திலும் மற்றும் அவருடைய சபையினிடத்திலும் ஐக்கியம் கொள்வதற்கு ஒரு மனிதன் மறுபடியும் பிறந்திருக்கவேண்டும் என்று போட்டியின் சட்டதிட்டங்கள் இருக்கும் பட்சத்தில், நாமும் இப்பூமியில் இருப்பதிலேயே மிகப்பெரிய ஸ்தாபனமாக இருந்து கொண்டு, அதேசமயம் இந்த போட்டியை சட்டதிட்டங்களின்படி விளையாடாத பட்சத்தில், முடிவில் நாமும் தகுதி நீக்கம் செய்யப்படுவோம். நாம் தேவனுடைய சட்ட திட்டங்களை சந்தித்தே ஆகவேண்டும். நம்முடைய சட்ட திட்டங்களின்படி அல்ல, ஆனால் அது அவருடைய சட்ட திட்டங்களாயிருக்கிறது. அதைக் கொண்டு தான் நாம் ஜீவிக்க வேண்டும். அவருடைய சட்ட திட்டங்களின்படிதான் நாம் ஓட்டத்தை ஓடிக் கொண்டிருக்கிறோம், எனவே அதில் நாம் நிலைத்திருக்கவேண்டும். 7எனவே, நீங்கள் நெப்போலியனை கவனிப்பீர்களானால், அவன் ஒரு பெரிய வீரனாயிருந்தாலும், ஒரு மாபெரும் ஜெயங்கொள்ளுகிறவனாய் இருந்தாலும், அவன் மக்களை பயமுறுத்தி அவர்களை ஜெயங்கொண்டான். ஆனால் அது போட்டியின் சட்டதிட்டம் அல்ல. போட்டியின் சட்டதிட்டம் என்பது அது அன்பைக் கொண்டுதான் ஜெயங்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. எனவே அன்புக்கு இணையான ஆயுதம் இவ்வுலகில் எங்குமே இல்லை. அதில்நான் அவ்வளவு நிச்சயமுடையவனாயிருக்கி றேன். எப்படியெனில், மக்களாகிய நாம் நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட மற்ற சட்டதிட்டங்கள் மேலாக அதிகப்படியான கவனத்தை வைக்கிறோம். ஏதோ உங்களிடத்தில் கடினமாக பேச வேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால் சில சமயங்களில் அப்படித்தான் பேசியாக வேண்டும். மேலும் நாம் அவைகளின் மீது அவ்வளவு முக்கியத்துவத்தை வைக்கி றோம் என்றால் கடைசியில் நாம் தகுதி நீக்கம் செய்யப்படுவதையே காண்போம். 8மார்டின் லூத்தர் மட்டும் போட்டியின் சட்டதிட்டங்களை சரியாக கடைபிடித்தி ருப்பாரானால்? மெத்தொடிஸ்டு (Methodist) சபை என்ற ஒரு காரியமே இருந்திருக்காது. அவ்விதமே மெத் தொடிஸ்டு சபை மட்டும் போட்டியின் சட்ட திட்டங்களை சரியாக கடைபிடித்திருப்பார் களானால்? பெந்தெகோஸ்து சபை என்ற ஒரு காரியமே இருந்திருக்காது. எனவே போட்டியின் சட்ட திட்டங்களை கடைப்பிடிப்பதில் நாம் தோல்வி அடைவோமானால், தேவன் தாமே நம்மை தகுதி நீக்கம் செய்து, இந்த கல்லுகளிலிருந்து ஆபிரகாமுக்கு பிள்ளைகளை எழுப்புவார். நாம் போட்டியின் சட்ட திட்டங்களை சரியாக கடைபிடிக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார், எனவே நாம் அவ்விதமே செய்யவேண்டும். மேலும் நாம் எவ்வளவுதான் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை பெற்றிருந்தாலும் நாம் போட்டியின் சட்ட திட்டங்களை கடைபிடிக்க திரும்பாத பட்சத்தில், அது எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்காது. 9இங்கே கூட்டத்தில் கலந்துகொள்ளும்படிக்கு தொலைவில் இருக்கும் அரிசோனாவி லிருந்து இங்கே வந்திருக்கும், ஹோபி (Hopi) இந்தியர்களுடன் இம்மதிய வேளையில் பேசிக் கொண்டிருந்தேன். அவர்களில் சில வாலிப மக்கள் கடந்த இரவு பீடத்தண்டையில் வந்து, கிறிஸ்துவுக்கு தங்கள் இருதயத்தை கொடுத்தார்கள் . அவர்களுடன் கூட ஒரு மிஷனரியும் வந்திருந்தார். அவர், “சகோதரன். பிரான்ஹாம், நான் இந்தியர்களுக்கு செய்யும் ஊழியப்பணியை தேவன் சற்று அதிகரிக்கும்படிக்கு, நீங்கள் அவரிடத்தில் கேட்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்”, என்றார். நான், “நானும் கூட அவர்களுக்கு அவ்விதமாகவே உணர்கிறேன்'', என்றேன். எனவே, ”தேவன் உங்களுக்கு ஒரு திறமையை கொடுத்திருப்பாரானால், அதினோடு கூட தரித்திருங்கள். நீங்கள் எதைச் செய்ய முயற்சித்தாலும், அந்த திறமை எவ்வளவு பெரிதானதாக இருந்தாலும், அதுதாமே சட்டதிட்டங்க ளின்படி இயங்காவிட்டால் ஓட்டத்திலிருந்து நீங்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள்'', என்றார். 10நான் அறிந்திருக்கும் மிகவும் வல்லமையான ஆயுதம் அது அன்பாயிருக்கிறது (LOVE). நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். மலைகளைப் போக்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனவே, இவ்விதமாக நாம் போட்டி என்று அழைக்கும் இதை நாம் விளையாட விரும்பும் பட்சத்தில்...... மேலும் நாம் தாமே ஜெயிக்க வேண்டும் என்று இருக்கும் பட்சத்தில், நாம் தாமே ஜெயிப்பதற்கான கொள்கைகளுக்கு மறுபடியும் திரும்ப வேண்டியதாயிருக்கிறது. நாம் பார்த்த அந்த எல்லா மகத்தான அடையாளங்களுக் காகவும், அற்புதங்களுக்காகவும் நாம் தேவனுக்கு துதியை செலுத்த வேண்டியதா யிருக்கிறது. ஆனால் இவ்விதமான காரியங்கள் தேவனுடைய கிறிஸ்தவ அன்பின் மேலும் மற்றும் தேவனுக்கும், அவருடைய மக்களுக்கும் கொடுக்கும் மரியாதையின் மேலாக கட்டப்படாத பட்சத்தில், அதுதாமே தோற்றுப்போகும். அது தோற்றேபோக வேண்டும். பாருங்கள்! காரணம் அதற்கு அஸ்திபாரம் இல்லை . 11சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் இருக்கும் லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அபெய் என்கிற குருமடத்தில் (Westminster Abbey) நின்று கொண்டிருந்தபோது, வாழ்க்கையின் சங்கீதம்' (Psalm of Life) என்னும் பாடலை எழுதிய கவிஞன் லாங் பெல்லோவின் (Long fellow) உருவ அமைப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது அவருடைய கவிதையை குறித்து சிந்திக்கலானேன், வாழ்க்கை என்பது ஒரு வெற்று கனவு என்றும் (வெறுமனே புசிப்பது, குடிப்பது மற்றும் சந்தோஷமாயிருப்பது) ஆத்துமாவும் மரித்து அது உறங்குகிறது என்றும் மற்றும் நாம் காணும் காட்சிகள் உண்மை அல்லவென்றும் சோகமுடன் அவ்வப்போது கூறாதே. வாழ்க்கை என்பது உண்மை! வாழ்க்கை நிச்சயமானதும் கூட! கல்லறை அதின் இலக்கல்ல! நீ மண்னென்றும் எனவே நீ மண்ணுக்கு திரும்புவாய் என்றும் சொல்லப்பட்டது ஆத்துமாவை குறித்தல்ல. மேலும் பெரிய மனிதர்களின் (கடந்து சென்ற) ஜீவியம் யாவும் நமக்கு எதை நினைவூட்டுகிறதென்றால், நாம் நம்முடைய ஜீவியத்தை இன்னும் உன்னத நிலைக்கு கொண்டுசெல்ல முடியும் எனவே நாம் இந்த ஜீவியத்தை விட்டு கடந்து போகும்போது, காலமென்னும் மணலின் மேலாக நம்முடைய அடிச்சுவடுகளை விட்டுச் செல்வோம். ஒரு வேளை வாழ்க்கையின் பெருமிதமான வழியில் பயணம் செய்யும் போது, சேதமடைந்து, நம்பிக்கையற்று இருக்கும் இன்னொரு சகோதரன், நம்முடைய அடிச்சுவடுகளை கண்டு மறுபடியும் தைரியங்கொண்டு எழுவான். எனவே நாம் எழும்பி, தொடர்ந்து கடும் முயற்சி செய்வோம் என்று நம்முடைய இருதயத்தில் தீர்மானிப்போம். அடிக்கப்படும்படிக்கு கொண்டு செல்லப்படும் ஊமை கால் நடைகளைப் போல் இல்லாமல் ஒரு வீரனாய் இருப்போம். 12அவ்விதமே சபையினுடைய ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கென்று மிகவும் சிறப்பானதை செய்யும்படிக்கு தங்களுடைய இருதயத்தில் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். நீங்கள் தேவனுக்கு எப்படி சேவை செய்வீர்கள்? நீங்கள் ஒருவருக்கொருவர் சேவை செய்வதின் மூலம் அவருக்கு சேவை செய்கிறீர்கள். இருப்பதிலேயே மிகவும் அடிமட்டமான நிலையை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உலகம் அழைக்கும் விதமாக தங்களை தாழ்த்திகொண்டு, பெரிய மனிதர்கள் என்று தங்களை காண்பிக்காதவர்களே இவ்வுலகில் மிகவும் பிரசித்தி பெற்ற நிலையை அடைந்திருக்கிறார்கள். ஒரு நோக்கத்தை நிறைவேற்றும்படிக்கு அவர்கள் தங்களை சிறுமைப்படுத்திக் கொண்டார்கள். இந்த இரவு, ஏறக்குறைய என் வயதில் இருக்கும் புருஷர்களும், ஸ்திரீகளும் கொண்ட இந்த கூட்டத்தாரைப் பார்க்கும்போது, நம்முடைய பள்ளிக் கூடத்தில் நாம் படித்த ஒரு வீரனை குறித்து இன்றிரவு நான் நினைக்கிறேன். அவையெல்லாவற்றையும் வெகு சீக்கிரத்தில் நாம் மறந்துவிட்டோம். அவன் சுவிட்சர்லாந்தின் ஆர்னால்ட் வான் வின்கள்ரீட் (Arnoldvon Winkelried) ஏன், இன்றைக்கும் அங்கே தொலைவில் சுவிஸ் (Swiss) மலைகளில் இருக்கும் மக்களிடையே அவனுடைய பெயரை சொல்வீர்களானால் அம்மக்களின் முகத்தில் ஒரு மாற்றத்தையும், அவர்களுடைய கன்னங்களில் கண்ணீர் ஓடுவதையும் பார்க்கலாம். 13நாமெல்லாரும் அவர்களுடைய வரலாற்றைப் பற்றி நன்கு அறிவோம். எப்படியெனில் ஃபின்னிஷ் மக்கள், என்னை மன்னிக்கவும் ஃபின்னிஷ் அல்ல ஆனால் சுவிஸ் மக்கள், அவர்கள் போரை தவிர்த்து, சமாதானத்துடன் சுவிட்சர்லாந்திலுள்ள மலைகளில் ஜீவிக்கும்படிக்கு, அங்கு வந்த ஒரு கூட்ட ஜெர்மானியர்கள். இன்றைக்கும் அவர்கள் போரில் ஈடுபடாத மக்கள். ஆனால் ஒரு நாள் அவர்களுடைய பொருளாதாரம் எதிரிகளால் தாக்கப்பட்டபோது, அங்கே அந்த மலைக்கு கீழாக இருக்கும் பள்ளத்தாக்கில் எல்லா ஃபின்னிஷ் புருஷர்களும் ஒன்று கூடினார்கள். தங்களுடைய வீடுகளையும், தங்களுடைய பிள்ளைகளையும் மற்றும் தங்கள் வாழ்நாளில் அதிகமாக நேசித்த எல்லாவற்றையும் பாதுகாக்கும்படிக்கு அங்கே சென்றார்கள், ஆம் அவைகளை பாதுகாக்கும்படிக்கு அங்கே சென்றார்கள். அவர்களை நோக்கி ஒரு பெரியமதில் சுவர் போல் இருக்கும் சேனை வருகிறதை கண்டபோது, அங்கே அவ்விடத்தில் அந்த சேனைக்கு அவர்களை ஒப்பிடும் போது தாங்கள் ஒரு சிறிய கூட்டம் என்பதை அவர்கள் அறிந்துக் கொண்டார்கள். அவர்களில் ஒவ்வொரு மனிதனும் ஈட்டியையும், கேடகத்தையும், தலைச்சீராவையும் இன்னும் மற்றபெரிய போர் ஆயுதங்களையும் எப்படி கையாள வேண்டும் என்று பயிற்சி பெற்றிருந்தார்கள். அது மட்டுமல்லாமல் பரந்து விரிந்திருக்கும் எல்லையில்லாத அவர்களுடைய அவ்வளவு பெரிய சேனையில் ஒரு மனிதன் கூட தங்களுடைய ஸ்தானத்தைவிட்டு விலகாதபடிக்கு அவர்கள் அவ்வளவு நேர்த்தியாக பயிற்சி பெற்றிருந்தார்கள். ஆனால் இவர்களோ இப்படியாக நின்று கொண்டிருந்தார்கள், எப்படியெனில் அவர்களுடன் சண்டையிடும்படிக்கு தங்கள் கையில் பழைய அரிவாளையும், பாறாங்கற்களையும், குச்சிகளையும் வைத்துக் கொண்டு மதிற்சுவர் போல் காணப்படும் அந்தப் பெரிய சேனையை தோற்கடிக்கும்படிக்கு அவர்களெல்லாரும் தங்கள் உரிமைக்காக அவர்களை எதிர்த்து நின்று கொண்டிருந்தார்கள். அவ்வளவு கடுமையாக போரிடக் கூடிய அவர்களுடைய எதிராளி படையில் கச்சிதமாக பயிற்றுவிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனையும் எதிர்க்க இந்த சிறிய படையால் என்னசெய்ய முடியும்? ஆம், அவர்கள் உதவியற்ற நிலையில் இருந்தார்கள். அவர்களை எதிர்த்து ஒரு காரியமும் அவர்களால் செய்ய முடியாமல் இருந்தது. 14ஆனால், முடிவில் ஏறக்குறைய முப்பத்தி மூன்று வயதிருக்கும் ஒரு வாலிபன் அங்கே காட்சியில் வந்தான், அவன், “சுவிட்சர்லாந்தின் கனவான்களே, இந்த நாளில் நான் சுவிட்சர்லாந்துக்காக என் ஜீவனைக் கொடுக்கப்போகிறேன்'', என்றான். அவர்கள், “ஆர்னால்டு வான் வின்கள்ரீட் (Arnold von winkelried) பெருங்கூட்டமாய் வருகிற அந்த சேனையை எதிர்த்து உன்னால் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள். அவன், “இந்த மலைக்கு அப்பால் உள்ள என் மனைவி மற்றும் என் மூன்று பிள்ளைகளிடத்திலும் ”தேவன் உங்களுக்கு துணை இருப்பாராக', என்று அவர்களிடத்தில் கூறிவிடை பெற்று வந்துவிட்டேன். அங்கே ஒரு சிறிய வெள்ளை வீடு இருக்கிறது, அவ்வீட்டின் வாசலில் அவர்கள் நின்று கொண்டு, நான் திரும்பி வீட்டுக்கு வருவேன் என்று எனக்காக அவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்'', என்றான். ஆனால் நான் மறுபடியும் இப்பூமியில் அவர்களை பார்க்கப் போவதில்லை, ஏனெனில் இன்றைய தினம் சுவிட்சர்லாந்துக்காகவும், அதின் உரிமைக்காகவும் என் ஜீவனை தியாகம் செய்யப்போகிறேன்'', என்றான். அவர்கள், “திரு. ஆர்னால்டு வான் வின்கள்ரீட், நீ என்ன செய்யப் போகிறாய்?” என்றார்கள். அவன், 'நீங்கள் வெறுமனே என் பின்னாக வந்து, உங்களிடத்தில் உள்ள எல்லாவற்றோடும் போரிடுங்கள்'', என்றான். அவர்கள், 'நீ என்னசெய்யப் போகிறாய்?“ என்றார்கள். அவன் தன் கையில் உள்ளதை தூக்கியெறிந்து விட்டு, அந்த பெரிய சேனை வருகிறதைக் கண்டான். எங்கே ஈட்டி ஏந்தியவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று காணுமட்டும் அந்த சேனையை சுற்றுமுற்றும் கண்னோட்டமிட்டான். இவ்விதமாக இந்த கதை போய்க் கொண்டிருந்தது. அவன்தன் கரங்களை உயர்த்தி, சரியாக அந்த ஈட்டிகளுக்கு மத்தியில், “விடுதலைக்கு வழிகொடுங்கள்'' என்று கத்திக் கொண்டே ஓடினான். தொடர்ந்து அவன் ”விடுதலைக்கு வழிகொடுங்கள்“ என்று கத்தினான். சரியாக ஒரு நூறு ஈட்டிகள் அவனை பிடிக்கும் இடத்தினூடாக ஓடி, தன் கரங்களை விரித்து, அதிகமான ஈட்டிகள் அவனை நோக்கி வரும்படிக்குச் செய்து, அவைகளை தன் மார்பில் ஏற்றுக்கொண்டான். அது எப்பேற்பட்ட ஒரு வீரதீரச் செயல், அது அந்த சேனையை நிலைகுலையச்செய்தது. அதைப் பார்த்த அந்த சிறிய சுவிஸ் படை தாங்கள் வைத்திருந்த குச்சிகளையும், கற்களையும், அரிவாள்களையும் கொண்டு எதிராளிப்படையை நிலைகுலையச் செய்து, அவர்களுடைய எல்லையை விட்டு ஓடும்படிக்குச் செய்தார்கள். அது முதற்கொண்டு அவர்களுக்கு யுத்தம் என்ற ஒன்று இல்லாமலிருந்தது. 15அப்படிப்பட்ட தீரச் செயல் மற்ற தீரச் செயல்களோடு அரிதாகவே ஒப்பிடப்பட்டு, ஒருபோதும் மிஞ்சப்படாமல் இருக்கிறது. ஆர்னால்டு வான் வின்கள்ரீடையும், அவனுடைய தீரச் செயலையும் இன்றைக்கும் சுவிட்சர்லாந்து நினைவுகூறுகிறது. நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு அவர்களுக்கு யுத்தம் இல்லாமலிருந்தது. அது தாமே ஒரு பெரிய தீரச் செயலாக இருக்கிறது. ஆனால் சகோதரனே சகோதரியே ஒரு நாளில் ஆதாமின் சந்ததியார் சுவருக்குள் அடைபட்டது போன்று எதிர்க்க முடியாத நிலையில் இருந்தார்கள். இதை அதோடு கூட ஒப்பிடும்போது, அது ஒருசிறிய காரியமாய் இருக்கிறது. அவர்களுக்கு தீர்க்கதரிசிகள் இருந்தார்கள். மற்றும் நியாயப்பிரமாணங்களும் இருந்தது. அவர்கள் தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து, நியாயப்பிரமாணங்களை அழித்துப்போட்டார்கள். எனவே ஆதாமின் சந்ததியார் அடைபட்ட நிலையில், அவர்களை எதிர்நோக்கி வரும் எதிராளியாகிய பிசாசையும் அவனுடைய முழு சேனைகளையும் எதிர்க்கக் கூடாமல் உதவியற்ற மற்றும் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தார்கள். அவைகள் நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட ஆவிகள், மனிதர்களை அவைகளோடு கூட ஒப்பிடும்போது, அழிவுள்ள மனிதனை அவைகளுடன் ஒப்பிடும்போது, அவன் கொஞ்சம் கூட இணையானவன் அல்ல. அவர்களால் என்ன செய்ய முடியும். அவர்கள் திராணியற்றவர்கள். ஆனால் மகிமையிலிருக்கும் பிதாவின் மடியிலிருந்து ஒருவர் புறப்பட்டுவந்தார். அவர், “இந்நாளில் நான் கீழே இறங்கி, விழுந்து போன ஆதாமின் சந்ததிக்கு என் ஜீவனைக் கொடுப்பேன்'', என்றார். 16அவரும் இப்பூமியில் வந்தபோது, மனிதனை ஜெயங் கொள்ளுகிற மரணமாகிய ஈட்டிகள் வந்து தாக்கும் இருளான ஸ்தலத்தைக் கண்டார். கல்வாரியில் அவைகளை தன் கரங்களில் பிடித்து, அதின் மேலாக விழுந்து மரணத்தை தான் ஏற்றுக்கொண்டு, கல்வியறிவில்லாத, படிப்பறிவற்ற, கந்தலான உடையணிந்த அந்த சிறிய கூட்டத்தாரிடத்தில் தன் கட்டளையை விட்டுச் சென்றார். மேலும் அவர்கள் எதிராளியினிடத்தில் சண்டையிடும்படிக்கு அவர்களுக்கு வெறுமனே குச்சிகளையும், கற்களையும் ஆயுதமாக விட்டுசெல்லாமல், பெந்தேகொஸ்தே நாளில் சபை இதுவரைக்கும் பெற்றிராத மிகப் பெரிய வல்லமையான ஆயுதத்தை அவர்களுடைய கரங்களில் கொடுத்தார். அதன் பின் அவர், “என்னைப் பின் பற்றி, உங்களிடத்தில் இருக்கும் யாவையும் கொண்டு போரிடுங்கள்', என்றார். அவரே வழிநடத்திச் செல்கிறவரும், அவரே வல்லமையுள்ள ஜெயங்கொள்ளுகிறவருமாய் இருக்கிறார். அவர் தனக்காகவும், தன்னுடைய சொந்த மகிமைக்காகவும் ஜெயங் கொள்ளாமல், விழுந்துபோன ஆதாமின் சந்ததியின் நன்மைக்காக ஜெயங்கொண்டவராய் இருக்கிறார். அவரைப்போல் வேறொரு ஜெயங்கொள்ளுகிறவர் இருந்ததில்லை. 17நெப்போலியன் தன்னுடைய முப்பத்திமூன்றாம் வயதில் குடிக்கு அடிமையாகி, அவன் தோற்கடிக்கப்பட்டான். ஆனால் அதே முப்பத்திமூன்றாம் வயதில் கிறிஸ்து ஜீவியமாகிய விளையாட்டை சரியானபடி விளையாடி மரணம், பாதாளம், வியாதி மற்றும் கல்லறையை ஜெயங்கொண்டார். அவரைப்போல் ஒரு ஜெயவீரர் இருந்ததில்லை, இருக்கப்போவதுமில்லை . சீமாட்டிகளே, கனவான்களே, என்னுடைய சகோதர சகோதரிகளே கிறிஸ்து நமக்காக எதை விட்டுச் சென்றிருக்கிறாரோ அதை சபையானது இன்றிரவு எடுத்துக்கொள்ள வேண்டிய நேரமாயிருக்கிறது. “நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பதினால் எல்லா மனுஷரும் நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று அறிந்துக்கொள்வார்கள்''. எனவே அந்த பட்டயத் தையும், சுய அர்ப்பணிப்பையும் எடுத்துக்கொண்டு, பழைய சுவிசேஷ வழிக்கு மறுபடியும் திரும்பி, நம்முடைய எதிரியை ஜெயங்கொள்ளப் புறப்பட்டுச் செல்வோம். ”தேவன், தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கி றவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் (அழிந்து போகாமல்) நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாக உலகத்தில் அன்புகூர்ந்ததுபோல்“, நாமும் அதே காரியத்தைக் கொண்டு, அன்பினாலே அவனை ஜெயங்கொள்வோம். 18அவர் பூமியில் இருந்தபோது, ஆதாமின் சந்ததியாருக்கு அநேக பயங்கள் இருந்தது. ஆம் அது உண்மைதான். அவைகள் இன்னும் அவர்களுக்கு இருக்கிறது, ஆனால் அவைகளை அவர்கள் பெற்றிருக்கக்கூடாது. எவ்விதமாக ஆர்னால்டு வான் வின்கள்ரீட் யுத்தத்தை ஒட்டுமொத்தமாக முடிவுக்கு கொண்டு வந்தானோ, அவ்விதமாகவே கிறிஸ்துவும் ஒட்டுமொத்தமாக கல்வாரியில் அவையாவற்றையும் ஜெயித்தார். அவர் பூமியில் இருந்தபோது, அவர் ஒரு வியாதிவயப்பட்ட மனிதனிடத்தில் சென்றார். ஏனெனில் வியாதியானது மனிதவர்கத்தை கட்டிப் போட்டுவைத்திருந்தது. அவர் அவனிடத்தில் சென்று, “பிசாசின் ஆவியே, இந்த மனிதனைவிட்டு வெளியேவரும்படிக்கு நான் உனக்கு கட்டளையிடுகிறேன்'', என்றார். அவர் அந்த பிசாசை ஜெயங் கொண்டார். மனிதன் கல்லறையில் மரித்தவனாய் கிடத்தப்பட்டிருந்தபோது, மனிதனுக்காக மரணத்தையும் அல்லது பித்து பிடித்திருந்த மனிதன் அவரை கொல்ல வரும் போது வியாதியையும் ஜெயித்தார். பித்து பிடித்திருந்த அந்த மனிதன், அவர் ஒரு தேவனுடைய குமாரன் என்பதை உணர்ந்து கொண்டான். எனவே அவன் அவரிடத்தில், 'நீர் எங்களை துரத்துவீரானால், நாங்கள் அந்த பன்றிக் கூட்டத்திற்குள் போகும்படிக்கு கட்டளையிடும்”, என்றான். ஏனெனில் இயேசுகிறிஸ்து எப்படிப்பட்ட அதிகாரத்தை பெற்றிருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். எங்கெல்லாம் அவர் பிசாசை சந்தித்தாரோ அங்கெல்லாம் அவனை ஜெயித்தார். அவர் அவனை தான் மட்டும் ஜெயிக்கவில்லை, ஆனால் சபைக்கும் அவர் கட்டளையை விட்டுச் சென்றார்; என்னவெனில் “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்கிறீர்களோ, அதை நான் உங்களுக்குச் செய்வேன்” என்பதே! 19உங்கள் கையில் என்ன இருக்கிறதோ அதை வைத்து போரிடுங்கள். உங்களால் பாட முடியுமானால், சுவிசேஷ பாடல்களைப் பாடுங்கள். உங்களுக்கு விசில் அடிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியாதென்றால், தேவனுடைய மகிமைக்காக எவ்வளவு சத்தமாக விசிலடிக்க முடியுமோ அவ்வளவு சத்தமாக விசிலடியுங்கள். உங்களால் கைகளைத் தட்டுவதைத் தவிர, வேறொன்றும் உங்களுக்குத் தெரியாதென்றால் வெறுமனே கைகளைத் தட்டுங்கள். உங்களுடைய கரங்களில் இருக்கிறதை வைத்து நீங்கள் ஜெயங்கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி இருக்கிற அக்கம் பக்கத்தினர் யாவரும் உங்களை நேசிக்கிற அளவுக்கு உங்கள் கரங்களை நேர்த்தியாகத் தட்டுங்கள். எல்லா ஸ்தாபனங்களும் நீங்கள் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர் என்று அறிந்துகொள்ளும் அளவுக்கு நீங்கள் விசிலடியுங்கள் அவ்விதமாக அவர்களை ஜெயங்கொள்ளுங்கள். நியாயமான முறையில் விளையாடுங்கள். சரியான வழியில் விளையாடுங்கள். சமுதாய சுவிசேஷம் அதிகப்படியாக பெருகி வருகிறதும், சபைகள் தங்களை ஒன்றாக இணைந்து, சமுதாய சுவிசேஷத்தை உருவாக்கிக்கொண்டு, தங்களை இறுகக் கட்டிக் கொள்கிற பயங்கரமான நாளில் நாம் ஜீவிக்கிறோம். இது ஒரு பயங்கரமானநாளாக இருக்கிறது. அவர்கள் எல்லா தேவத்துவத்தையும் மற்றும் கிறிஸ்துவினிடத்தி லிருந்து எல்லா மகிமையையும் எடுத்துப்போட்டு, அவரை வெறுமனே ஒரு தீர்க்கதரிசியாக மட்டுமே ஆக்க முயற்சிக்கிறார்கள். கிறிஸ்து வெறுமனே ஒரு தீர்க்கதரிசியாக மட்டுமே இருப்பாரானால் நாமெல்லாரும் இழக்கப்பட்டவர்களாய் இருப்போம். அவர் தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானவர். 20சில நாட்களுக்கு முன்பு ஒரு ஸ்திரீ என்னிடத்தில் இவ்விதமாகக் கூறினார். அவள், “திரு. பிரான்ஹாம் உங்கள் பேச்சில் ஒரு காரியம் எனக்கு பிடிக்கவில்லை”, என்றாள். சரி, “அது என்ன, சகோதரியே?” என்றேன். அவள், “நீங்கள் கிறிஸ்துவை அதிகப்படியாக மகிமைப்படுத்துகிறீர்கள், அவரைப் பற்றி நீங்கள் அதிகமாக பெருமை அடித்துக் கொள்கிறீர்கள். அவர் என்னவாய் இருக்கிறாரோ அதைக் காட்டிலும் அவரை பெரிதாக்குகிறீர்கள்'', என்றாள். நான், “எனக்கு பத்தாயிரம் மொழிகள் இருந்தாலும், அவை எனக்கு போதாது மற்றும் அதை வைத்து அவர் உண்மையிலேயே என்னவாயிருக்கிறார் என்று என்னால் விவரித்தும் கூறமுடியாது. அவர் எல்லா துதிக்கும் பாத்திரராயிருக்கிறார்”, என்றேன். அவள், “திரு. பிரான்ஹாம் நீங்கள் ஒரு அடிப்படைவாதி என்று பிரசங்க பீடத்தில் கூறினதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்”, என்றாள். நான், ஆம், “வார்த்தையின்படி அது உண்மைதான்”, என்றேன். அவள், “நீங்கள் தேவன் என்று கூறுகிற அவரை, அவர் வெறுமனே ஒரு மனிதன் தான் என்று வார்த்தையைக் கொண்டு விளக்கி என்னால் உங்களுக்கு நிரூபிக்க முடியும்”, என்றாள். நான், “அவர் ஒரு தேவன். தேவன் கிறிஸ்துவுக்குள்ளாக இருந்து, உலகத்தை தனக்கு ஒப்புரவாக்கிக்கொண்டார். அவர் வெறுமனே ஒரு தீர்க்கதரிசியாக இருப்பாரானால், நாமெல்லாரும் கைவிடப்பட்டவர்களாய் இருப்போம்', என்றேன். அவள், நான் வேதத்தைக் கொண்டு, அவர் ஒருமனிதன் என்று உங்களுக்கு நிரூபிப்பேனென்றால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா?“ என்றாள். நான், ஆம், அம்மையீர், வேதாகமம் அப்படியாக கூறும் பட்சத்தில்“, என்றேன். அவள், தூய யோவான் 11 - ம் அதிகாரத்தில், அவர் லாசருவின் கல்லறையண்டையில் சென்றபோது, அவர் கண்ணீர் விட்டார் என்று வேதாகமம் கூறுகிறது. அவர் தேவனாக இருப்பாரானால், அவர் கண்ணீர் விட்டு இருக்கமாட்டார். எனவே அந்த காரியம் அவர் சாதாரன ஒரு நல்ல மனிதனே தவிர வேறொன்றுமில்லை என்று நிரூபிக்கிறது, என்றாள். 21நான், “சகோதரியே, உங்களுடைய விவாதத்தில் ஒரு பிரயோஜனமுமில்லை. நீங்கள் அவரைக் சரியாக காணத் தவறினீர்கள். நீங்கள் மனிதனை மட்டும் தான் பார்த்தீர்கள், ஆனால் அந்த மனிதனுக்குள் இருந்த தேவனைப் பார்க்கத் தவறினீர்கள். அது உண்மைதான். அவர் லாசருவின் கல்லறையண்டை சென்றபோது, அவர் ஒரு மனிதனைப் போல் அழுதார் தான், ஆனால் அவர் தன்னுடைய சிறிய தோள்பட்டைகளை பின்னுக்கு இழுத்து, நிமிர்ந்து, மரித்த மனிதனின் ஆத்துமா நான்கு நாள் பிரயாணத்திலுள்ள நிலையில், அவனைப் பார்த்து ”லாசருவே எழுந்து வா“ என்றார். அந்த மரித்த மனிதன் தன் கால்களில் மறுபடியும் எழுந்து நின்றான். அது மனிதனைக் காட்டிலும் மேலானவர் பேசினதாகும். அவரே மகத்தான ஜெயவீரர். அது தேவன் தன் குமாரன் மூலம் பேசினதாகும். புசிக்க எதுவும் இல்லாமல், பசியுடன் மலையிலிருந்து அந்த இரவில் அவர் இறங்கி வந்த சுற்றிலும் பார்த்து புசிக்க ஏதாவது உண்டா என அங்கிருந்த அத்தி மரத்தைப் பார்த்தபோது அவர் மனிதனே! அவருக்கு பசியுண்டானபோது அவர் மனிதனாக இருந்தார். ஆனால் ஐந்து அப்பங்களையும் இரண்டு சிறிய மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேர்களை போஷித்தபோது அவர் மனிதனைக் காட்டிலும் மேலானவராக இருந்தார். அது, தேவன் தன்னுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் பேசுகிறதும் மற்றும், தேவத்துவம் மனிதனில் இருந்ததை காண்பிக்கிறது. 22அன்றொரு இரவில், அவர் அந்த சிறிய படகின் பின்னால் இருந்தபோது, பத்தாயிரம் பிசாசுகள் அவரை கடலில் மூழ்கடிப்போம் என்று ஆணையிட்டபோது, உண்மையிலேயே அப்பொழுது அவர் ஓர்மனிதனாகத்தான் இருந்தார். அது (படகு ) அந்த அதிக சீற்றம் கொண்ட கடலில் ஒருபாட்டில் மூடியைப் போல் இங்கும் அங்கும் அலசடிப்பட்டுக் கொண்டிருந்தது. இதைப்பார்த்துக் கொண்டிருந்த பிசாசு, இப்பொழுது நாம் இவரைப் பிடித்துவிட்டோம்'', என்றது. ஆனால் அவர் கண்விழித்து, கப்பற்பாயின் கம்பம் இருக்கும் படகின் முன் பகுதிக்கு வந்து, அதின் மேல் தன் பாதத்தை வைத்து, நிமிர்ந்து பார்த்து, “இரையாதே, அமைதலாயிரு'', என்றார். உடனே அலைகளும், காற்றும் அவருக்கு கீழ்படிந்தன. அதை அவர் செய்தபோது, ஒரு மனிதனைக் காட்டிலும் உயர்ந்தவராக இருந்தார். அவர், சிலுவையில் இரக்கத்திற்காக கதறினபோது, அவர் ஒருமனிதனாக இருந்தார். அவர், ஒரு மனிதன் மரிப்பதுபோல மரித்தார், ஆனால் ஈஸ்டர் காலையில் ரோம அரசின் முத்திரை உடைக்கப்பட்டு, கல்லறையானது வெறுமையாக்கப்பட்டு, அவர் உயிர்த்தெழுந்தார். அவர் மனிதன் மரிப்பது போல மரித்திருக்கலாம், ஆனால் தேவனைப் போல மறுபடியும் உயிர்த்தெழுந்தார். அவர் தேவனும் மனிதனும் ஆனவர். ஒரு கவிஞன் இப்படியாக பாடினதில் ஆச்சரிய மொன்றுமில்லை. ஜீவிக்கும்போது, அவர் என்னை நேசித்தார், மரிக்கும்போது, அவர் என்னை இரட்சித்தார், அடக்கம் பண்ணப்படும்போது, அவர் என்னுடைய பாவங்களை வெகுதூரம் கொண்டு சென்றார். உயிர்த்தெழுந்த போது, அவர் என்னை முற்றிலும்என்றென்றைக்குமாய் நீதிமானாக்கினார். என்றோ ஒரு நாள், அவர் வருகிறார்; ஓ, அது ஒரு மகிமையான நாள் ஆகவே தான் குருடான ஃபென்னி கிராஸ்பி இப்படியாக முறையிட்டதில் எந்த ஒரு ஆச்சரியமொன்றுமில்லை. என்னைக் கடந்து போகாதிரும், ஓ இரக்கமுள்ள இரட்சகரே! என்னுடைய தாழ்மையான ஜெபத்தை கேட்டருளும்; மற்றவர்களை நீர் அழைத்துக் கொண்டிருக்கும்போது, என்னைக் கடந்துபோகாதிரும், நீரே என் எல்லா சந்தோஷத்தின் ஊற்றும், ஜீவனைக் காட்டிலும் பெரிதானவராயிருக்கிறீர். உம்மையல்லாமல் எனக்கு பூமியில் வேறுயாருமில்லை, பரலோகத்திலும் உம்மைத் தவிர வேறு யாருமில்லை! 23அவர் மனிதனைக் காட்டிலும் மேலானவர், அவர் தேவனுடைய வல்லமையுள்ள ஜெயவீரர், ஓ நாம் அவரை எவ்வளவாய் அன்பு கூரவேண்டும்! அவரை எவ்வளவாய் நாம் துதிக்க வேண்டும்! வியாதியையும், மரணத்தையும், பாதாளத்தையும் ஜெயித்த அவர் மூலமாய் நாம் ஜெயவீரர்களைக் காட்டிலும் பெரிதானவர்களாய் இருக்கும்படி , நம் மீது அன்பு கூர்ந்து தன்னையே கொடுத்த அவரைப் போல; நாமும் ஒருவரிலொருவர் அன்பு கூற வேண்டியவர்களாய் இருக்கிறோம். இங்கே பூமியில் நாம் அவரை ஒரு ஜெயவீரராக பார்க்கிறோம். அவர், அங்கே அந்த கல்லறையின் பக்கத்தில் நின்று, அந்த மனிதனுக்குள் இருந்த மரணத்தை ஜெயித்தார். அவனுடைய ஆத்துமா நான்கு நாள் பிரயாணத்தில் இருந்தது. எனக்கு தெரியாது அப்பொழுது அவன் எங்கே இருந்தான் என்று, உங்களுக்கும் கூட அதைப்பற்றி தெரியாது. ஆனால் அவன் எங்கிருந்தாலும், அவர் அதை ஜெயித்து, அதை அவர் திரும்பக்கொண்டு வந்தார். அழிவானது அதினுடைய எஜமானை அறிந்திருக்கிறது. ஆமென்! மரித்துப்போயிருந்த இந்த மனிதனுடைய ஆத்துமா, மறுபடியும் திரும்ப வந்து, அழிவுள்ள சரீரத்தில் திரும்பவும் ஜீவித்து, மேஜையில் அமர்ந்து முன் போல் அது புசித்தது. அதற்கு முன்னர் எந்த ஒரு மனிதனும் இவ்விதமான காரியத்தை செய்ததில்லை. அவர் தேவனுடைய வல்லமையுள்ள ஜெயவீரர். 24அவர் சவ அடக்கத்தை (Funeral) ஒருபோதும் செய்ததில்லை . மரணம் அவருடைய சமூகத்தில் நிற்க முடியாது. எப்படி மரணமும் ஜீவனும் ஒன்றாக வாசம் செய்ய முடியும்? அவ்விதமாக அவை இருக்கமுடியாது. எனவே சகோதரனே, இன்றைக்கு, சபையானது மறுபடியும் தேவனுடைய ஆவியினால் பிறந்திருக்கும் போது, மரணமும், ஜீவனும் ஒன்றாக வாசம் செய்ய முடியாது. ஏனெனில் ஏதோ காரியம் நடந்திருக்கிறது. கிறிஸ்து நமக்குள்ளாக வந்து, நம்முடைய கட்டுக்கடங்கா மாம்ச உணர்ச்சிகளை ஜெயங்கொள்ளுகிறார். மற்றும் நம்முடைய ஆசைகளையும் ஜெயங் கொள்ளுகிறார். நம்மிடத்தில் இருக்கிற எல்லா தேவபக்தியற்ற காரியங்களையும் ஜெயங்கொள்வார். எனவே அவர் பிழைத்திருப்பதினால் நாமும் பிழைத்திருக்கிறோம். தேவபக்தியற்ற ஒவ்வொன்றையும் அவர் ஜெயங்கொள்வார். அதை அவர் ஏற்கனவே செய்து முடித்துவிட்டார்; அதை வெறுமனே நாம் ஏற்றுக்கொள்ளும்படிக்கு அது நம்முடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் அவருடைய பூமிக்குரிய ஊழியத்தில் அவரை ஒரு ஜெயவீரராக பார்க்கிறோம். நிச்சயமாக நாம் அவரை அப்படித்தான் பார்க்கிறோம். ஆனால் இப்பொழுது, அவர் மரித்தபின் என்ன செய்தார் என்று பார்ப்போம். அதன் பின்னரும் அவர் தொடர்ந்து ஜெயங் கொண்டார். அவர் கல்லறையை ஜெயித்து அதோடு அவர் நின்றுவிடவில்லை. வேதாகமம், “அவருடைய ஆத்துமா பாதாளத்திற்கு இறங்கி, நோவா நீடிய பொறுமையோடே காத்திருந்த நாட்களில் மனம்திரும்பாத, காவலிலுள்ள (சிறையில்) ஆவிகளிடத்தில் சென்று பிரசங்கித்தார்”, என்று கூறுகிறது. 25வானமும், பூமியும் காரிருளுக்குள் போய்க்கொண்டிருந்த போது, மலைகளிலுள்ளகற்பாறைகள் சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, என்னால் அவரை பார்க்கமுடிந்தது. முழு வானமும், நிலவும், நட்சத்திரங்களும் பிரகாசிக்கமறுத்தது. அதை அவர் ஜெயங்கொண்டார். அவர் கீழே இறங்கி, பாதாளத்துக்குச் சென்று, இழந்து போன ஆத்துமாக்கள்இருக்கும் இடத்தினுடைய கதவைத் தட்டினார். அதினுடைய கதவுகள் திறந்தபோது, ஏனோக்கைப் பரிகாசம் செய்து, சிரித்தவர்களும்; நோவாவைப் பரிகாசம் செய்தவர்களும் அக்கதவண்டை வந்தபோது; அவர்,“ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங் கூட கர்த்தர் வருகிறார் என்று ஏனோக்கு முன்னுரைத்த நபர்நான் தான். ஏன் நீங்கள் ஏனோக்கை விசுவாசிக்கவில்லை? ஏன் நீங்கள் நோவாவை விசுவாசிக்கவில்லை?'' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவர் ஜெயங்கொண்டார் என்பதை ஒவ்வொன்றும் அறிந்துகொள்ள வேண்டியதாய் இருந்தது. அவர்களை உள்ளே வைத்து அவர் கதவை அடைத்தபோது, கிருபையின் நாட்கள் முடிவடைந்தது.கீழிருக்கும் பாதாளத்தின் மிகவும் அடித்தளப் பகுதிக்கு அவர் சென்றார். புகைக்கறைபடிந்த பிசாசின் பாதாள கதவை அவர் தட்டினார். கதவை தட்டினது யார் என்று பார்ப்பதற்காக நாம் கதவண்டை வருவது போல, பிசாசும் கதவண்டை ஓடிவந்து, “ஓ, கடைசியிலே இங்கேயே வந்துவிட்டாயா நீ?” தீர்க்கதரிசிகளை கொன்றபோது, உண்மையிலே நான் உன்னை கொன்றுவிட்டேன் என்று நினைத்தேன். சிறையில் யோவான் ஸ்நானகனுடைய தலையை துண்டித்தபோது, நிச்சயமாக உன்னை நான் கொன்றுவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால், இப்பொழுது, கடைசியிலே இங்கேயே வந்துவிட்டாயா நீ?, என்றான். 26அவர் நிமிர்ந்து நின்று, 'பிசாசே, ஜீவனுள்ள தேவனுடைய கன்னிப்பிறப்பின் குமாரன் நான். என்னுடைய இரத்தம் இன்னும் சிலுவையில் ஈரமாக இருக்கிறது. நான் கிரயத்தை செலுத்தி, நான் ஜெயங் கொண்டிருக்கிறேன். என்னுடையது என்று நீ உரிமை கோரும் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொள்ளவும், நீ பெற்றிருக்கிற உரிமையை உரிந்துபோடும்படிக்கும் நான் இங்கே கீழே இறங்கி வந்திருக்கிறேன்“, என்று கூறுவதை என்னால் கேட்கமுடிகிறது. அவர், அவனுடைய விலா பக்கத்தில் தன் கையை நீட்டி, மரணத்துக்கும் பாதாளத்துக்கும் உரிய திறவுகோல்ளை சடுதியாகப்பிடுங்கி, அவனுக்குரிய இடத்தில் போய் அவன் விழும்படிக்கு அவனை தன் காலால் ஒரு உதை விட்டார். அவர் பாதாளத்தை ஜெயங்கொண்டார். அவர் உயிர்தெழுந்தபொழுது, அவருடைய பக்கவாட்டில் மரணத்துக்கும், பாதாளத்துக்கும் உரிய திறவுகோல்களை வைத்திருந்தார். அப்படியானால் சபை ஏன் பயப்பட வேண்டும்? அவர் மரணத்தை ஜெயங்கொண்டார். அவர் பாதாளத்தை ஜெயம் கொண்டார். அவர் வெளியே தன் வழியில் புறப்பட்டுபோய் கொண்டிருந்தார். நினைவு கொள்ளுங்கள், அவரோடுகூட இன்னும் சில உத்தமமானவர்கள் சென்றார்கள். அவர்கள் பரதீசு (Paradise) என்று அழைக்கப்பட்ட இடத்தில் இருந்தவர்கள். அவர்கள் தேவனுடைய சமூகத்தில் பிரவேசிக்க முடியாதவர்களாய் இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் சிந்தப்பட்ட செம்மறியாடு, வெள்ளாடு இன்னும் மற்றவைகளின் இரத்தத்தின் கீழாக இருந்தார்கள். அது பாவத்தை முற்றிலுமாக நீக்கிப்போடாது. ஆனால் பாவத்தை மறைத்து மட்டுமே வைக்கும். இன்றைக்கும் அதுதான் காரியம். நீங்கள் உங்கள் பாவத்தை மறைத்துக்கொண்டு உள்ளே வரமுடியாது. ஆனால் அது முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். அதை ஒரே ஒருகாரியம் மட்டுமே செய்யமுடியும், அது உங்களுடைய சபை அல்ல; அது நீங்கள் எடுக்கும் தண்ணீர் ஞானஸ்நானமும் அல்ல, அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமாயிருக்கிறது, அதுதான் பாவத்தை மூடி , பாவத்தை முற்றிலுமாக நம்மைவிட்டு நீக்கிப்போடும். ஒரே ஒரு காரியத்தைக் கொண்டுதான் நாம் ஜெயங்கொள்ளமுடியும், அது கர்த்தராகிய இயேசுவின் இரத்தமாயிருக்கிறது. 27அது ஞாயிற்றுக்கிழமை காலை ஏறக்குறைய நான்கு மணி என்று வைத்துக் கொள்ளலாம், அப்பொழுது சாராளும், ஆபிரகாமும் பரதீசியில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். திடீரென, மெதுவாக கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. இந்த நாளில், இந்த காலை வேளையில், யார் கதவை தட்டுகிறது என்று பார்க்கும்படி யோபு கதவண்டை சென்றார். அவர் (யோபு) பார்த்த போது, தன் கரங்களை உயர்த்தி,“அவர் என்னுடைய மீட்பர், மின்னல் பிரகாசித்துக் கொண்டிருந்தபோது நான் பார்த்தது இவரைத் தான். அவர் ஜீவிக்கிறார் என்று எனக்கு தெரியும். கடைசி நாட்களில் பூமியின் மேல் நிற்பார் என்று எனக்குத் தெரியும். அது இவர்தான்”. ஆபிரகாம், “யோபுவே, நீ என்ன கூறினாய்?” அவர், அவனுடைய தோளுக்கு பின்னால் நின்று, “சாராள், இங்கேவா. இங்கே பார். கவனி, கதவண்டை வந்திருப்பது யார் என்று, என்றார். சாராள், “நான் கூடாரத்தில் நகைத்தபோது, தன் முதுகை என் பக்கமாக திருப்பி நின்றவாறு, நான் நகைத்ததை அறிந்து கொண்ட அந்த நபர் தான், அது உண்மை . அது அவர் தான்”, என்றார். 28இதோ தானியேல் ஓடிவந்து, சாராளின் முதுகு பின்னால் நின்றவாறு பார்த்து, “கைகளால் பெயர்க்கப்படாத மலையிலிருந்து வந்த கல் இது தான்”,என்றான். அதற்கு பிறகு எசேக்கியேல் வேகமாக ஓடிவந்து,“மேலே மத்திய ஆகாயத்தில் சுழன்று கொண்டிருந்த சக்கரத்துக்குள் சக்கரம் இவர் தான்”,என்றான். அவர் தான் வல்லமையுள்ள ஜெயவீரர். ஓ, என்னே, நாம் அப்படியாக அவர்கள் கூறிக்கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்தபோது, அவர், 'பிள்ளைளே, வாருங்கள், கொஞ்சத்திலே உண்மையாயிருந்தீர்கள். வாருங்கள், இக்காலையில் நாம் வெளியே புறப்பட்டு செல்கிறோம். நீங்கள் இங்கே நீண்ட நாட்களாக இருந்து விட்டீர்கள். நாம் இதைக் காட்டிலும் மேலான இடத்திற்குப் போகிறோம்“, என்றார். ஓ, தேவனே சபையினுடைய வாஞ்சையும் அவ்விதமாக இருக்கட்டும். இன்னும் உயரச் செல்வோமாக. எகிப்திலிருந்து நம்முடைய முளைகளையெல்லாம் பிடுங்கி எடுத்து இங்கிருந்து புறப்பட்டு செல்வோமாக. 29ஆபிரகாம், “பிதாவே, நாம் போகும்போது, கொஞ்சம் நிற்கலாமா? அங்கிருக்கும் எங்களுடைய பழைய இடத்தை பார்க்க விரும்புகிறேன்”, என்றார். “நிச்சயமாக, நான் என்னுடைய சீஷர்களோடு நாற்பது நாட்கள் பேச இருக்கிறேன். அப்பொழுது நீங்கள் சுற்றிப்பார்க்கலாம்''. உங்களுக்கு தெரியும், வேதாகமம் கூறுகிறது அவருடைய உயிர்தெழுதலுக்கு பிறகு, அநேக பரிசுத்தவான்கள்; உயிர்தெழுந்து பட்டணத்திற்குள் சென்று, அநேகருக்கு காட்சியளித்தனர். ஆபிரகாமும், சாராளும் பட்டணத்தில் நடந்து சென்றவாறு,“அது மிகவும் அருமையாய் இல்லையா?” “சாராள், அந்த பழைய இடத்தைப் பார்”, என்றார். ஓ, என்னே. நான் உண்மையிலேயே பக்திபரவசமுடையவனாக உணர்கிறேன். நிச்சயமாக அவ்விதமாய் நான் உணர்கிறேன். தொடர்ந்து, ஆபிரகாம், “அங்கே கவனி, அதோ இருக்கிறது தாவீதின் பட்டணம்; அதோ இருக்கிறது அந்த எல்லா அழகான இடங்களும். அதோ, நான் கட்டின பலிபீடங்கள். கர்த்தருடைய நாமம் ஆசீர்வதிக்கப்படுவதாக”, என்றான். 30நாற்பது நாட்கள் கழித்து, அங்கே நின்றபடி, தன்னுடைய கடைசி கட்டளையாக, “நீங்கள் உலகமெங்கிலும் சென்று, சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (சபையை கட்டும் படிக்காக அல்ல, ஸ்தாபனங்களை உருவாக்கும்படிக்காக அல்ல, ஆனால் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படிக்கு கூறினார், நாமோ வேறு விதமாக காரியங்களை செய்தோம்). விசுவாசிக்கிறவர்களுக்கு இந்த அடையாளங்கள் பின்தொடரும்; என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள் .......” இன்னும் அவ்விதமான காரியங்களை அவர் தொடர்ந்து கூறினார். அவர் அவ்விதமாக தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, புவிஈர்ப்பு விசையானது ஜெயங்கொள்ளப்பட்டது. நுற்றுக்கணக்கான சகோதரர்கள் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்த போது, அவருடைய பாதத்தை பிடித்திருந்த புவி ஈர்ப்பு விசையின்பிடி தளர்ந்து லேசாக மாறினது. அவரும், அவருடைய பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் மேலெழும்பி, இன்னும் மேலாக சென்று, உயரப்போனார்கள். அவர்கள் அப்படியாக தொடர்ந்து நட்சத்திரங்களையும் தாண்டி, நிலவையும் தாண்டி, நட்சத்திரங்களுக்கும் மேலான நட்சத்திரங்களையும் தாண்டி உயரச் சென்றார்கள். அதன்பின் பெரிய பட்டணத்தை காண்கின்றஅளவுக்கு உயர வந்திருந்தார்கள். ஓ , மகத்தான ஜெயவீரராகிய இயேசு, அவர்களுக்கு முன்னாக நின்று வீரநடை போட்டுச் சென்றது, எப்படியாக இருந்திருக்கும் பாருங்கள். திடீரென, அந்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் பார்வையில் அந்த அழகான பெரிய பட்டணம் காட்சியில் தென்பட்டது, அதைக் கண்டவுடன் முழு பரலோகமும் அதிரத்தக்கதாக ஒரு பெரிய வெடிச்சத்தம் போன்ற சத்தத்துடன் அவர்கள் சத்தமிட்டார்கள், “வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே உயருங்கள் மகிமையின் இராஜா உட்பிரவேசிப்பார்”. 31உங்களுக்குத் தெரியும், ஹிட்லர் பிரான்சு தேசத்தைவென்று, அந்த வெற்றியின் வளைவில் வந்து நின்றபோது, முடிவில்லாத நீண்ட மைல்கள் தூரத்துக்கு ஜெர்மானிய போர் வீரர்கள் வீறுநடை போட்டு வந்தார்கள், போர் விமானங்களும் கரும்புகைகளை கக்கியபடி வானத்தை கருமையாக்கியது என்று அவர்கள் கூறினார்கள். ஹிட்லரின் பிரான்ஸ் வெற்றி வருகையை கொண்டாடும்படிக்கு அவர்களெல்லாரும் அங்கு வந்திருந்தார்கள். அவர்கள் ஸ்டாலினை எப்படியாக ஜெர்மானிக்கு கொண்டு வந்தார்கள், ஆனால், ஓ, சகோதரனே, அந்நாளில் சபையும் இயேசுவை அழைத்துக் கொண்டு வந்தபோது, “வாசல்களே , உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உட்பிரவேசிப்பார்'', என்று ஆரவாரமிட்டார்கள். அங்கிருந்த தூதன், “யார் இந்த மகிமையின் இராஜா?” என்று கேட்டான். அதைக் கேட்டபழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள், “அவர் சேனைகளின் கர்த்தரானவர், அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தர், மகத்தான ஜெயவீரர். அவர் சிறைப்பட்டவர்களை சிறைப்படுத்தி, மனுஷருக்கு வெகுமதிகளை கொடுத்தார்'', என்று திரும்பவும் சத்தமிட்டார்கள். அதை அவர் செய்தார் என்று வேதாகமம் கூறுகிறது. 32வீட்டுக்கு திரும்பும்போது கொடுக்கும் வரவேற்பைக் குறித்து நீங்கள் என்னமாய் சொல்லக்கூடும்? அங்கே அந்த பெரிய முத்துக்கள் பதித்த கதவண்டை இருந்த தூதர்கள், உடனடியாக அதை அவர்கள் திறந்துவிட்டார்கள். இதோ, அந்த மகிமையின் வீதிகள் வழியாக பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அவரைப் பின்தொடர்ந்து, “எல்லோரும் இயேசுவின் நாமத்தின் வல்லமையை போற்றுங்கள்'', என்று பாடியபடி வந்தார்கள். பிதாவின் சிங்காசனத்துக்கு முன்பாக அவர் வந்து நின்று, ”பிதாவே, இதோ இவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். இவர்கள் கொஞ்சத்திலே உண்மையாய் இருந்தார்கள்“, என்றார். அவரும், “இங்கே மேலேறி வா, மகனே, நான் உன்னுடைய எல்லா சத்துருக்களையும், உன்னுடைய பாதப்படியாக்கி போடும் வரைக்கும், என்னுடைய வலது பாரிசத்தில்உட்காரும்”, என்றார். இதோ, அவர் இன்றிரவு அங்கே நின்று கொண்டிருக்கிறார். இதோ, இங்கிருக்கிறார் இந்த வல்லமையுள்ள ஜெயவீரர், இதோ, எல்லோரும் காண்கிற வண்ணமாக அவர் இருக்கிறார். அவர் ஒருவரே வல்லமையுள்ள ஜெயவீரர், ஏனெனில் அவர் திரையை இரண்டாக கிழித்துப் போட்டார். 33நம்முடைய ஆண்டவராகிய இயேசு ஜெயங் கொள்ளுவதைப் போல வேறு எவராலும் ஜெயங்கொள்ள முடியாது. இன்றிரவு இந்த உலகத்திற்கு ஒரு அசலான காரியம் தேவைப்படுகிற தாயிருக்கிறது. இன்றிரவு இந்த உலகத்திற்கு எது தேவைப்படுகிறதென்றால், ஒரு காரியத்தை தெரிவித்து, அதை உண்மையிலேயே கொண்டிருக்கும் ஒரு அசலான காரியம் தேவைப்படுகிறதாயிருக்கிறது' கிறிஸ்தவர்களாகிய உங்களிடத்திலிருந்து ஒரு உண்மையுள்ள காரியத்தை இன்றிரவு உலகமானது எதிர்பார்க்கிறது. அவர்கள் சபையினுடைய போலியான ஜீவியத்தைக் கண்டு களைப்படைந்திருக்கிறார்கள். “நான் பிரஸ் பிடெரியன், நான் மெத்தொடிஸ்ட், நான் கத்தோலிக்கன், நான் பெந்தெகொஸ்தே , நான் நசரேயன்”, என்று அடிக்கடி கூறுவதைக் கேட்டு சலிப்படைந்து மிகவும் சோர்வுற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட காரியத்தை உலகம் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் ஜீவ அப்பத்திற்காக பசியாயிருக்கிறார்கள். இயேசு, “நீங்கள் உலகத்துக்கு உப்பாக இருக்கிறீர்கள், உப்பானது அதின் சாரத்தை இழந்துபோகுமானால், அது ஒன்றுக்கும் பிரயோஜனப்படாமல், வீதியிலே தூக்கி எறியப்பட வேண்டியதாய் இருக்கிறது” என்றார். உப்பானது தொடர்பு கொள்ளப்படும்போது, அது சாரத்தை உடையதாய் இருக்கிறது. நீங்கள் உப்பாக இருக்கும்போது, உலகம் உங்களைக் கண்டு தாகம் கொள்ளும். தேவனே ! அசலானபுருஷர்களையும், பெண்களையும்எங்களுக்குத் தந்தருளும், சத்தியத்திற்காகதைரியமாக நிற்கக்கூடிய புருஷர்களையும், பெண்களையும் எங்களுக்குத்தந்தருளும். சங்கிலியில் உங்களுடைய இணைப்பு எங்கே பெலவீனமாக இருக்கிறதோ, அதுவே மிகவும் பெலமுள்ள இடமாயிருக்கிறது.சங்கிலியில், மற்றஇணைப்புகள் எவ்வளவுதான் பெலமுள்ளதாயிருந்தாலும், அந்த குறிப்பிட்ட இடத்தில்சங்கிலி பெலவீனமாக இருக்கிறது என்பதை தெரிவிக்கிறது. அந்த இடத்தைத் தான் நீங்கள்மிகவும் பாதுகாப்பாக வைக்கிறீர்கள். 34உங்கள் எல்லோருக்கும் தெரியும், நான் ஒரு வேட்டைக்காரன் என்று, வேட்டைக்காக ஒரு மிருகத்தை கொல்ல நான் அங்கே செல்வதில்லை, ஆனால்அங்கே தேவனைப் பார்க்கவும், இயற்கையோடு ஜீவிக்கும்படிக்கும் அங்கே நான் செல்லுகிறேன். சில சமயங்களில் மோட்டார் வாகன எரிபொருள் மற்றும் சிகரெட் புகையை முகர்வதினால் நான் மிகவும் வியாதிப்பட்டு, அவ்வளவாக சோர்ந்து போய் விடுகிறேன்; அது உங்களுக்கு குமட்டலை உண்டாக்கி வாந்தி பண்ணும்படிக்கு செய்துவிடும். மேலும் ஆகாய விமானம் இன்னும் அதுபோன்ற காரியங்களின் இரைச்சலை தவிர்த்து, ஆனால் அதே சமயத்தில் அங்கே மலைமேலாக எங்கோ இருக்கும் அவருடைய தேவாலயத்துக்குச் சென்று,“ஊசி இலை மரங்களினூடாக, (pinetrees) காற்றின் ஓசையின் மூலம் வரும் தேவனுடைய என்றென்றைக்குமான குசுகுசு சத்தத்தை கேட்கும்படிக்கு அங்கே மேலே சென்று தனிமையிலிருக்க நான் விரும்புகிறேன். அது எனக்கு தேவனாக இருக்கிறது. ஓ, அதைக் குறித்துப் பார்க்கும்போது அதில் ஏதோ ஒரு உண்மை இருக்கிறது. 35என்னுடைய நண்பன், பெர்ட் கால்லுடன், நார்த் உட்ஸ் (NorthWoods) என்னுமிடத்தில், நான் வேட்டையாடுவது வழக்கம். கொஞ்ச நாட்களுக்கு முன்பு, அங்கே மேலே இருக்கும் நியூ இங்கிலாந்து என்னுமிடத்தில் நடந்த சுகமளிக்கும் எழுப்புதல் கூட்டத்தில் அவரை நான் சந்தித்து, கைகுலுக்கி, இரவு உணவை அவரோடுகூட புசித்தேன். ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும், அங்கே போய் வேட்டையாடுவது வழக்கம். அவ்விதமாக ஒரு முறை சென்றபோது, அவருடன் நான் பேசிக்கொண்டிருந் தேன். நான் பார்த்ததிலேயே மிகவும் திறமையான வேட்டைக்காரர் அவர். அவரைக் குறித்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை; அவர் எங்கிருப்பார் என்று நீங்கள் அறிவீர்கள். காட்டில் அவரை நீங்கள் தேட வேண்டிய அவசியமில்லை ; அவர் காட்டில் எந்த இடத்தில் இருக்கிறார் என்று அவருக்கு தெரியும். அவர் ஒரு திறமையான வேட்டைக்காரர், ஆனால் இருப்பதிலேயே நான் அறிந்த மிகவும் கீழ்தரமான மனிதன் அவர். அவர் எவ்வளவுக்கெவ்வளவு கொடூரமானவராக இருக்க முடியுமோ, அந்த அளவுக்கு அவர் ஒரு கொடுமையான வேட்டைக்காரராக இருந்தார். என்னை வேண்டுமென்றே கஷ்டப்படுத்த வேண்டும் என்று, அவர் சிறிய மான்குட்டிகளை சுட விரும்புவார். 36எனவே, வேட்டைக்காரர்களாகிய, இங்கிருக்கும் டெக்சாஸ்பையன்களே, ஒரு மான்குட்டியை சுடுவது என்பது தவறில்லை. ஒரு மான்குட்டியை சுடலாம் என்று சட்டம்கூறுமானால், அதில் தவறொன்றுமில்லை. மானுடைய வயது எதுவானாலும் அதில் தவறொன்றுமில்லை. ஆபிரகாம் ஒரு கன்றுக்குட்டியை அடித்தார், தேவனும் அதை சாப்பிட்டார். அது சரிதான். எனவே அவைகளை கொல்வதினால் எந்த ஒரு சேதமுமில்லை. அது உண்மையிலேயே சரிதான். ஆனால் ஒரு கொலைகாரனாக இருக்கவேண்டும் என்று வரும்போது, அப்பொழுது காரியமே வித்தியாசமாகிவிடும். அது உங்களை இடறலடைய செய்கிறதா? உண்மையிலேயே அதை அவர் செய்தார். அவர் கன்றுக் குட்டியை புசித்து, பசுவின் பாலைக் குடித்து, சில சோள அடைகளையும் அவர் புசித்தார். அது உண்மையிலேயே சரிதான். பாலிலிருந்து கடைந்தெடுத்த வெண்னையையும் புசித்தார். உண்மையிலேயே அதை அவர் புசித்தார். அவர் அதை புசித்து, ஆபிரகாமுடைய கண் முன்னாலேயேஅவர் மறைந்து போனார். “அவர் ஒரு தூதன்”, என்று நீங்கள் கூறினீர்களே, ஆனால் ஆபிரகாமோ அவரை தேவனாகிய “ஏலோஹிம்” என்றழைத்தார். அது சரிதான். அவர் தேவன்தான். ஓ, நான் மிகவும் சந்தோஷமடைகிறேன். ஏனெனில் அதை அவர் தனது கரங்களில் வைத்திருந்தார். நீர் எவ்வளவு மகத்தானவர்! 37யாரோ ஒருவர் என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம், அவர் தேவன் தான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டார். நான், “நிச்சயமாக அவர் தேவன் தான்”, என்றேன். அவர் நம்முடைய மகத்தானசிருஷ்டிகர். நாமெல்லாரும் பதினாறு மூலகங்களினால் உருவாக்கப்பட்டிருக்கிறோம். எனவே அவர் தரையிலே குனிந்து சில பெட்ரோலியம், பிரபஞ்ச வெளிச்சம் மற்றும் அனுக்களையும் எடுத்து, ஊதி ஒருசிறிய சரீரத்தை உண்டாக்கி அதற்குள் நுழைந்து கொண்டார். அவ்விதமே அவருடைய தூதர்களையும் ஒரு சிறிய சரீரத்துக்குள் நுழையும்படிச் செய்தார். பின்னர் அவர்கள் ஆபிரகாமிடத்தில் நடந்து சென்றார்கள். நிச்சயமாக, அவருக்கு பசி உண்டாக, அவர் இறைச்சியை புசித்தார், அதன் பின்னர் அவனுடைய பார்வையிலிருந்து மறைந்து போனார். அதே தேவன், நான் எங்கே அடக்கம் பண்ணப்படுவேன் என்று அறிவார். நீங்களும் எங்கே அடக்கம் பண்ணப்படுவீர்கள் என்று அவருக்குத் தெரியும். 38சமீபத்தில், என் தலையில் மிஞ்சியிருந்த இந்த இரண்டு அல்லது மூன்று தலைமுடியை வாரிக் கொண்டிருந்தேன். பின்னாக உட்கார்ந்து கொண்டிருந்த என் மனைவி என்னிடத்தில்,“பில்லி, நீங்கள் ஏறக்குறைய வழுக்கை தலையராகி விட்டீர்கள்', என்றாள் நான், “இருப்பினும் நான் ஒரு தலைமுடியைக் கூட இழக்கவில்லை”, என்றேன். அவள், “அப்படியானால் அவையெல்லாம் எங்கே இருக்கிறது, எனக்கு சொல்லுங்கள்'', என்றாள். நான், “அவைகளை நான் பெறுவதற்கு முன்னதாக, அது எங்கே இருந்தது? அங்கே அவை எனக்காக காத்துக்கொண்டிருக்கிறது; என்றோ ஒரு நாள், அவைகளிடத்தில் நான் செல்வேன். அவை அங்கே பத்திரமாக இருக்கிறது'' என்றேன். உங்கள் தலையில் இருக்கிற ஒவ்வொரு தலைமுடியும் எண்ணப்பட்டிருக்கிறது, அவைகளில் ஒன்று கூட தொலைந்துபோவதில்லை. நான் சிறு பையனாக இருந்தபோது என்னுடைய கரங்களும், சுவிசேஷ பிரசங்க வேலையினிமித்தம் இறங்கிப்போன என்னுடைய தோள்களும், என்றோ ஒரு நாள் திரும்பவும் அவருடைய சாயலில் உள்ள அசலான நிலைக்கு திரும்பி, அவருக்கு ஒத்த சாயலில் (likeness) எழுந்து நிற்கும். அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டவனாகவும், அவருடைய கிருபையினால் மீட்கப்பட்டவனாகவும், நான் திரும்ப எழுந்து நிற்பேன். ஆம், உண்மையிலேயே, மரணத்தைக் குறித்த எந்த ஒருபயமும் எனக்கில்லை . அவன் வருகிறான். 39ஒரு நாள், நான் பெர்ட்டை (Bert) சந்திக்க சென்றிருந்தேன், வழக்கம் போல அவர் ஒரு சிறிய ஊதலை (Whistle) செய்து வைத்திருந்தார். அந்த ஊதலை வைத்து ஒரு சிறிய மான்குட்டி கத்துவது போல அதை வைத்து ஊதுவார். நான், “பெர்ட், நீங்கள் இதை உபயோகிக்ககூடாது', என்றேன். அவர், “ஓ, பில்லி, உன் எண்ணத்தை மாற்றிக் கொள். நீ ஒரு கோழை பிரசங்கி, உங்க மாதிரி ஆட்கள் எல்லோரும் இவ்விதமாகத்தான் இருப்பீர்கள். நீங்க ஒரு திறமையான வேட்டைக்காரர் தான், ஆனால் நீங்க மிகவும் கோழியின் இருதயம் (கோழைத்தனம்) கொண்டவர்'', என்றார். நான், “பெர்ட், நான் ஒரு வேட்டைக்காரன் தான், ஆனால் அதே சமயத்தில் நான் ஒரு கொலைகாரன் கிடையாது. நீங்க அவ்விதமாக செய்வதை நான் பார்க்க விரும்பவில்லை, அதை உபயோகிக்காதீர்கள், பெர்ட்'', என்றேன். அவர், “ஆ, உங்க வேலையை பாருங்க', என்றார். அந்த காலையில் ஏறக்குறைய ஆறு அங்குல உயர பனிப்பொழிவில் வேட்டையாடத்து வங்கினோம், அது ஒரு நல்ல வேட்டை நேரமாக இருக்கும் என்று எந்த ஒரு வேட்டைக்காரனுக்கும் தெரியும். நாங்கள் வேட்டையாடிக் கொண்டிருந்தோம், நான் அங்கு போய் சேருவதற்கு, சற்று கால தாமதமாகி அதன் பின்னர்தான் நான் அங்கு போய் சேர்ந்தேன். ஏனெனில் சற்று அதிகமாக நான் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டியதாகி விட்டது. அந்த காலை முழுவதும் நாங்கள் வேட்டையாடி, ஒன்றையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை, காரணம் அங்கிருக்கும் வெள்ளை - வால் மான், அவைகளுக்கு எப்படி பதுங்கிக்கொள்ள வேண்டும் என்று தெரியும். குறிப்பாக, பகல் வேளைகளில் அவைகள் வெளியே வராமல் பதுங்கிக் கொள்ளும். 40அது ஏறக்குறைய நடுப்பகல் இருக்கும். ஆம், இந்த கூடாரத்தின் பாதி அளவுக்கு இருக்கும் ஒரு சிறிய திறந்த வெளியில் பெர்ட் உட்கார்ந்து கொண்டிருந்தார். நான் நினைத்தேன், அவர் தன்னுடைய காபி கூஜாவை எடுக்கப்போகிறார் என்று. அது நாம் குடிக்கிற காபி அல்ல, ஆனால் அது சூடான சாக்லெட்பானம். அவர் தன்னுடைய சாக்லெட் பான கூஜாவை எடுப்பார் என்றும், பின்னர் நாங்கள் இறைச்சி அல்லது கொத்திய பழத்துண்டுகள் இடையே கொண்டிருக்கும் சில இரு ரொட்டித் துண்டுகளை (Sandwich) புசித்து, திரும்பவும் வேட்டைக்கு போவோம் என்று நான் நினைத்தேன், ஏனென்றால் அந்த காலை முழுவதும் ஒரு (மான்) தடயத்தை கூட நாங்கள் பார்க்கவில்லை. மான்கள் எல்லாம் பயந்து போய் இருந்தன. பகலில், அவைகள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் சிறு செடிகள் மற்றும் புதர்களுக்கு கீழாக மறைந்துக்கொள்ளும், ஆகவே அவைகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. 41நான் அங்கே நின்று கொண்டிருந்தபோது, அவர் அங்கே வந்து உட்கார்ந்து, தன்னுடைய பாக்கெட்டில் கையை நுழைப்பதை கவனித்தேன். அவர் தன்னுடைய பாக்கெட்டிலிருந்து இந்த சிறிய ஊதலை வெளியேஎடுத்தார். நான், “பெர்ட், உண்மையிலேயே நீங்கள் அப்படி செய்யக்கூடாது'', என்று நினைக்கிறேன். அவர் என்னை தன்னுடைய பல்லி பார்வை கொண்ட கண்களால் பார்த்து சிரித்து, தன்னுடைய ஊதலை ஊதத் துவங்கினார். நான், ”பெர்ட், அப்படி செய்யாதீர்கள்'', என்றேன். ஆனால் அதை அவர் ஊதினவுடன், என்னுடைய இடத்திலிருந்து இருபது கெஜ தூரம் கூட இருக்காது, அங்கிருந்து ஒரு பெரிய தாய்மான் (doe) அந்த சத்தத்தை கேட்டு வந்து நின்றது. எனவே, டெள (doe) என்பது ஒரு பெண்மான் ஆகும். ஆம், அவளுடைய பழுப்பு நிற கண்களையும், அவளுடைய முகத்தில் இருக்கும் இரத்த நாளங்களையும் பார்க்க கூடிய அளவுக்கு அவ்வளவு நெருக்கத்தில் அவள் வந்திருந்தாள், அவளுடைய காதுகள் நிமிர்ந்து நின்று பார்ப்பதற்கு அவள் ஒரு அழகான மிருகமாக இருந்தாள். அவள் அவ்வளவு நெருக்கத்தில் வந்து நிற்பதற்கான காரணம் என்ன? ஏனெனில் ஒரு குட்டிமான் அழும் சத்தத்தை அவள் கேட்டாள். நான் பெர்ட்டை நோக்கிப் பார்த்தேன், அவரும் என்னை திரும்பிப்பார்த்தார். “பெர்ட், நீங்க அப்படி செய்யக்கூடாது, நிச்சயமாக நீங்க அப்படி செய்ய மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்''. 42அதை அவர் மறுபடியும் ஊத ஆரம்பித்தார். வழக்கமாக அந்த பகல் வேளையில் அங்கே ஒரு மான் வந்து நிற்பது என்பது வழக்கத்திற்கு மாறானது. அவள் அந்த திறந்த வெளியில் தைரியமாக வெளியே வந்தாள். ஓ, அவ்விதமாக அவைகள் செய்யவே செய்யாது. அவள் பார்க்கிற அளவுக்கு, அவள் வெளியில் வந்தாள். நூற்றி எண்பது ரவை மஷ்ரூம் தோட்டா இருக்கும் 30.06, 180 நீள துப்பாக்கியில் (Rifle) இருக்கும் நெம்பு கோலை அவர் இழுக்கும் சத்தத்தை நான் கேட்டேன். அவர் சரியாக குறிப்பார்த்து சுடக்கூடியவர். அவர், அந்த நீளதுப்பாக்கியை சுடும்படிக்கு குறிபார்த்துக் கொண்டிருக்கும்போது; நான், “ஓ, தேவனே, உண்மையிலேயே அவர் அப்படிசெய்யக் கூடாது. அந்த உத்தமமான தாய் மான், சபை நடிக்கிற மாதிரி, அவள் நடிக்கவில்லை. அவளிடத்தில்ஒரு உண்மையுள்ள காரியம் இருக்கிறது. அது, அவள் ஒரு தாயாக இருக்கிறாள். ஒரு மான்குட்டி ஆபத்தில் இருக்கிறது என்று அவள் அறிவாள். ஏதோ அவ்விதமாக இருக்கவேண்டும் என்று அவள் நடிக்கவில்லை. அசலானதும், உத்தமமானதுமான ஒரு காரியம் அவளிடத்தில் இருக்கிறது. அவள் ஒரு தாயாக இருக்கிறாள்; அவ்விதமாக அவள் நடிக்கவில்லை அவளிடத்தில் இருக்கிற ஏதோ காரியம் அவளை அவ்விதமாக செய்யச்செய்கிறது. அதற்குக் காரணம் அவள் ஒரு தாய்”, என்று எண்ணினேன். 43அவள் இன்னும் சில அடிகள் முன்னோக்கி வந்தாள். நான், “ஓ, பெர்ட் , அவளிடத்திலிருந்து அவளுடைய இருதயத்தை அவ்விதமாக சிதறடிக்க செய்யப் போகிறாயா?” என்று எண்ணினேன். எனக்குத் தெரியும், அவ்விதமாகஅந்த நீள துப்பாக்கி சுடுமானால், அவளுடைய உத்தமமான இருதயத்தை அவளிடத்திலிருந்து இருபக்கமும் வெளியே சிதறடிக்கும்படி அவர் செய்துவிடுவார். ஆம், அவருக்கு அவ்வளவு அருகில் அவள் இருப்பதினால், அவளை அவர் தலைகீழாக திருப்பி போட்டுவிடுவார். நான், “அந்த விலையேறப்பெற்ற தாய் தன்னுடைய குட்டியைத் தேடி வந்திருக்கிறாளே', என்று நினைத்தேன். அந்த மான் சுற்றும் முற்றும் பார்த்து, அந்த வேட்டைக்காரரைக் கண்டது. அவள் நடுங்கினாள், ஆனாலும், இல்லை , அவள் அங்கிருந்து ஓடவில்லை. ஏனெனில் அவள் ஒரு தாய், அவள் அங்கேயே தரித்திருந்தாள். காரணம் அவளுடைய குட்டி ஆபத்தில் இருக்கிறது. ஓ, அது எவ்வளவு உண்மையான காரியமாயிருக்கிறது. நான் என் தலையை திருப்பிக் கொண்டேன். அதை என்னால் பார்க்கவே முடியவில்லை. நான், “தேவனே, அவர் அப்படி செய்வதை, அந்த விலையேறப்பெற்ற தாயைக் கொல்வதை என்னால் பார்க்க முடியவில்லை, அவளுக்குள்ளாக இருந்த ஏதோ காரியம் அவளை அங்கே உந்தித்தள்ளிக் கொண்டு வந்திருக்கிறது, காரணம் அது அவள் ஒரு தாயாக இருப்பதினிமித்தம்'', என்று எண்ணினேன். துப்பாக்கி அவளை சுடப்போகும் சத்தத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நான் என் தலையை திருப்பிக் கொண்டேன். ”தேவனே, அவர் அப்படி செய்யும்படிக்கு விட்டுவிடாதேயும்“, என்றேன். நான் ஒரு நிமிடம் காத்திருந்தேன். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கப்படவில்லை. நான் திரும்பிப் பார்த்தேன், அப்பொழுது, துப்பாக்கி இப்படியாக சாய்வதை கவனித்தேன். அவரால் அதைச் சுடமுடியவில்லை . அவர் திரும்பிப் பார்த்தார், அவருடைய கண்ணங்களிலிருந்து பெரிய கண்ணீர் துளிகள் வழிந்து கொண்டிருந்தது. துப்பாக்கியை அவர் கீழே போட்டு, என்னுடைய பேண்ட் காலை பிடித்துக்கொண்டு, “பில்லி, அது என் இருதயத்தை தொட்டுவிட்டது. நீர் பேசுகிற அந்த இயேசுவினிடத்தில் என்னை வழிநடத்தும். அன்பை அருளுகிற அந்த கிறிஸ்துவை நான் அறிந்துக் கொள்ளட்டும்”, என்றார். 44அது என்ன? அது, அவர் உண்மையான ஒன்றைப் பார்த்தார். நடிப்பைப் போன்று இருக்கிற ஒரு காரியத்தை அவர் பார்க்கவில்லை. மாயமாலமில்லாத ஒன்றை அவர் பார்த்தார். அவர் உண்மையான ஒரு காரியத்தை அங்கே பார்த்தார். அங்கே அந்த பனிபடர்ந்த கரையிலே, அந்த கொடூர இருதயமுள்ள வேட்டைக்காரரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவண்டையிலே வழிநடத்தினேன். அதற்குப் பிறகு அவர் அன்பான, தாழ்மையுள்ள கிறிஸ்தவராக மாறினார். ஏன்? பிரசங்கங்கள் எல்லாம் அதைச் செய்யவில்லை. அதற்கு காரணம், ஒரு உண்மையான காரியத்தை அவர் பார்த்தார். ஓ, ஜீவனுள்ள தேவனுடைய சபையே, இன்றிரவு, உலகம் ஒரு உண்மையான காரியத்தை எதிர் பார்க்கிறது. மரணத்தை நேருக்கு நேராக நின்று சந்திக்கும்படிக்கு, உன் இருதயத்தில் அந்த அளவுக்கு நீங்கள் கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ள விருப்பமுடையவர்களாய் இருக்கிறீர்களா? வியாதிப்பட்டிருக்கும், வியாதியஸ்த மக்களாகிய நீங்களும்; வாழ்வோ , சாவோ , அவரை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக்கொண்டு, இப்பொழுது அவருடைய வார்த்தையின் மேலாக நீங்கள் நிற்பீர்களா? இவ்விதமான கருத்து வேறுபாடுகளையும், இன்னும் இந்த எல்லா சிறிய தொல்லைகளையும், ஸ்தாபன பிரிவுகளையும் கொண்டிருக்கும் நீங்கள், தெருவில் நடந்து செல்லும்போது அங்கிருக்கும் ஆண்களும், பெண்களும் உங்களைப் பார்த்து, “உண்மையிலேயே தேவபக்தியுள்ள புருஷர்களும், ஸ்திரீகளும் இருப்பார்களென்றால், அதோ போகிறார்களே அது அவர்கள்தான்” என்று சொல்லதக்கதாக, அதை காண்பிக்கும்படிக்கு நீங்கள் ஒரு காரியத்தை பெற்றிருக்கவேண்டும் என்று விரும்பவில்லையா? உண்மையான ஒரு காரியத்தை , அதைக் கூறும் ஒரு ஜீவியம். 45இதைப்பற்றி நாம் சிந்தித்துக் கொண்டிருக்கையில், நாம் சற்று தலை வணங்குவோம். அது என்ன? அந்த வேட்டைக்காரனை அன்பு ஜெயங்கொண்டது. தேவனுடைய அன்பு ஜெயங்கொள்ளுகிறதாய் இருக்கிறது. இன்றிரவு, இந்த கட்டிடத்தில் இருக்கும் நீங்கள் யாவரும் அந்த தாய்மான் தன் குட்டிக்காக எவ்விதமாக அன்பைக் காண்பித்ததோ, அவ்விதமே நீங்களும் கிறிஸ்துவை உங்கள் இருதயத்தில், அவர் உங்களுக்கு அவ்வளவு ஒரு நிஜப்பொருளாக இருக்கும் அளவுக்கு நீங்கள் அவரை பெற்றிருக்கவேண்டும் என்று விரும்பவில்லையா? நாம் இப்பொழுது காத்துக்கொண்டிருக்கையில், அமைதியாக உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? நீங்கள் எவ்வளவு நாட்கள் கிறிஸ்தவராக இருக்கிறீர்கள் என்று எனக்கு கவலையில்லை, ஆனால் இதை கேட்கவேண்டும் என்று உங்களிடத்தில் நான் கேட்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது அருமையானது. எல்லா இடத்திலும், நூற்றுக்கணக்கான கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. தேவனே, நான் ஒரு ஸ்திரீயாக, நான் ஒரு புருஷனாக எழும்பட்டும். நான் ஒரு பரிசுத்தவானாக எழும்பட்டும். நான் ஒரு உண்மையான நபராக என்னுடைய இருக்கையிலிருந்து எழும்பட்டும். ஓ, தேவனே, கொடூர இருதயமுள்ள பாவிகள் என்னை ஒரு எடுத்துக்காட்டாகப் பின்பற்றி, கவனித்து, என்னை பின்தொடர்ந்து கல்வாரிக்கு வரும் அளவுக்கு உம்முடைய அன்பை என்னுடைய இருதயத்தில் அவ்வளவாக வெளிக்காண்பிக்கட்டும். 46நாம் அப்படியாக கொஞ்ச நேரம் காத்துக் கொண்டிருக்கையில் இன்னும் வேறு யாராவது இருக்கிறீர்களா? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். கொஞ்ச நேரத்திற்கு முன்பாக தங்களுடைய கரங்களை உயர்த்தாதவர்களை நான் அறிவேன். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வாலிப சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. அங்கே பின்னால் உள்ளவர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது வெளியே இருக்கிற நீங்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நண்பனே, கவனி, “அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணப்போகிறது, சகோதரன் பிரான்ஹாம்?” என்று நீங்கள் கேட்கலாம். ஓ, நண்பனே, ஒருபோதும் குளிராகவும், இறுக்கமாகவும் இருக்க வேண்டாம். நாம் எங்கே நிற்கிறோம் என்று உணர்ந்து கொள்வோம். நம்முடைய கரங்களை உயர்த்தி, “தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்”, என்று சொல்வோமாக. இந்த இரு வரிசைகளுக்கு இடையில் இருக்கும் உள்ள உங்களை, தேவன் ஆசீர்வதிப்பாராக. கொஞ்ச நேரத்திற்கு முன்பு நான் உங்களை பார்க்கவில்லை. இங்கே பின்னால் இருக்கிற உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக, மிகவும் உத்தமமாயிருங்கள். 47ஒருவேளை நீங்கள், சகோதரன் பிரான்ஹாம், நான் அந்நிய பாஷையில் பேசியிருக்கிறேன். நான் கூச்சலிட்டிருக்கிறேன்'', என்று கூறலாம். அது நல்லதுதான். அதற்கு விரோதமாக நான் ஒன்றும் கூறவில்லை ; அது தேவனுடைய கிரியைகளாக இருக்கிறது. ஆனால், கவனியுங்கள் நண்பரே, அதோடுகூட அன்பும் வரவில்லையென்றால், ஒருவரும் உங்களை விசுவாசிக்கமாட்டார்கள், ஆம் ஒருவரும் உங்களை விசுவாசிக்க மாட்டார்கள். அது அருமையானது. நானும் அதை விசுவாசிக்கிறேன். ஆனால், அதே சமயத்தில் அப்படிப்பட்ட காரியங்கள் உங்களிடத்தில் இல்லாமல், அன்பு மட்டும் இருக்குமானால், மற்றவர்கள் உங்களை உடனே விசுவாசிப்பார்கள். அது சரிதான். நீங்கள் அந்த உண்மையான தேவனுடைய அன்பை பெற்றுக்கொள்ளுங்கள், அதன்பின்பு அப்படிப்பட்ட காரியங்கள் தானாகவே பின்தொடரும், ஆனால் முதலாவது அதற்கு முன்னர் தேவனைப் பெற்றுக் கொள்ளுங்கள். தேவனைப் பெற்றுக்கொள்ளுங்கள், அசலான காரியத்தை பெற்றுக்கொள்ளுங்கள். மரத்தை பெற்றுக்கொள்ளுங்கள். அதன்பின்பு அது தன்னுடைய சொந்தகனிகளைக் கொடுக்கும். கொஞ்ச நேரத்திற்கு முன்பு கரங்களை உயர்த்தாதவர்கள் வேறு யாராவது இருந்தால் இப்பொழுது உங்கள் கரங்களை உயர்த்தி, “தேவனே, என்மேல் கிருபையாயிரும்”, என்று கூறுங்கள். அவர் அங்கே நின்றுகொண்டு உங்களை கவனிக்கிறார் என்று நீங்கள் நினைக்கவில்லையா? வாலிப சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அது நல்லது. இங்கே இருக்கும் சிறிய சீமாட்டியே... அங்கே உட்கார்ந்திருக்கும் சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஒருவேளை இதுவே உங்களுடைய கடைசி தருணமாக இருக்கலாம். அங்கே பின்னால் இருக்கும் இந்த சிறிய பெண்னை ஆசீர்வதியும், அது ஒருசிறிய பையன், அவனுடைய சிறிய இருதயத்தை ஆசீர்வதியும். நீங்கள், அந்த சிறு பையனுக்கு அதைப்பற்றி என்ன தெரியும்“, என்று கேட்கலாம். இயேசு, “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடங்கொடுங்கள், அவர்களை தடை பண்ணாதிருங்கள், பரலோக இராஜ்ஜியம் அப்படிப்பட்டவர்களுடையது', என்றார். 48அங்கே கரங்களை உயர்த்தியிருக்கும் சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வாலிப மனுஷனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. தேனே, தேவன் உங்களிலிருந்து ஒரு சிறு பிரசங்கியை, இன்னொரு சிறு பையனை கொண்டுவரும்படிக்கு நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது, நாம் மிகவும் அமைதியாக இருப்போம். இதைக் குறித்து சிந்தித்துப்பாருங்கள் ஒருவேளை இதுவே உன்னுடைய கடைசி இரவாக இருந்தால் எப்படியிருக்கும்? அதற்குப் பிறகு உனக்கு ஒரு தருணம் கூட இல்லாமல் போகும். இந்த ஜீவியத்தை விட்டு நீங்கள் கடந்து போகும்போது, எல்லாம் முடிந்து போயிருக்கும். ஒருவேளை உங்கள் வாழ்நாளில் நீங்கள் அநேக வருடங்களை வீணடித்திருக்கலாம். ஆனால் இப்பொழுது காரியம் என்ன? இன்று இரவிலிருந்து நாம் துவங்கலாமே. சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஒரு வேலை கொஞ்ச நேரம் காத்திருப்பதென்பது உங்களுக்கு அது அதிகப்படியான காரியமாக இருக்கலாம். நீங்கள் மரணத்துக்கு நீங்கலாகி ஜீவனுக்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் தேவனுக்கு உங்கள் கரங்களை உயர்த்தி, அதை உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து செய்யுங்கள், அப்பொழுது தேவன் இங்கேயே உங்களுக்குள் ஒரு காரியத்தை செய்கிறாரா இல்லையா என்று பாருங்கள். நிச்சயமாக அவர் செய்வார். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அங்கிருக்கும் அவள் அவ்வளவு ஒரு இளமையான, வாலிப சீமாட்டியாவாள். பாருங்கள் இந்த ஏளனமான ராக் அண்டு ரோல் இசை மற்றும் ஆபாசமான பூகி-ஊகி (Booge-Woogey) நடனங்கள் இருக்கும் இக்காலத்தில் ஒரு வாலிபப் பெண் கிறிஸ்துவை சேவிக்கும்படிக்கு தன் கரங்களை உயர்த்தியிருக்கிறாள். வாலிபப் பெண்னே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அதை நீங்களாகவே செய்ய முடியாது. கிறிஸ்து இங்கிருக்கிறார். ''பிதாவானவர் ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரமாட்டான். என்னிடத்தில் வருகிற யாவருக்கும், நான் நித்திய ஜீவனை அளித்து, அவர்களை கடைசி நாளில் உயிரோடே எழுப்புவேன்“. இன்னொரு கரம்? அங்கே உட்கார்ந்திருக்கும் அந்த வாலிபப் பெண்னையும், அவள் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அவளுடைய சிறிய நண்பரையும் தேவன் அசீர்வதிப்பாராக. 49“அதினால் ஏதாவது பிரயோஜனமாயிருக்குமா?'' என்று நீங்கள் கேட்கலாம். அது நீங்கள் கரங்களை உயர்த்தின்போது, என்ன அர்த்தங்கொண்டு உயர்த்தினீர்களோ அதைப் பொறுத்ததாயிருக்கிறது. நமக்கு சிறிய கோட்பாடுகளும் மற்றும் நாம் செய்கிற இந்த, அந்த இன்னும் மற்ற சிறிய காரியங்களும் நமக்கு உண்டு என்பது எனக்குத் தெரியும், ஆனால் இயேசு,”என் வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிற அவனுக்கு (பிரதிப் பெயர்), நித்திய ஜீவன் உண்டு (நிகழ்காலம்) அது தேவனுடைய சொந்த ஜீவனாகிய (ஸோயீ - ZOE), அவன் ஆக்கினைக்கு உட்படாமல், மரணத்துக்கு நீங்கலாகி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான். அதைத் தான் அவர் கூறியிருக்கிறார். நீங்கள் பிரசங்க பீடத்தை நோக்கி ஓட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அல்லது உங்கள் இருக்கையண்டையில் முழங்கால்படியிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அல்லது உங்கள் கரங்களை உயர்த்தவேண்டும் என்று விரும்புகிறீர்களா அல்லது உங்களை சரணடையச் செய்திட வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அது காரியமல்ல. ஆனால், அது நீங்கள் என்ன நிலைமையில் பிரசங்க பீடத்தண்டை சென்றீர்கள்; உங்கள் இருக்கையில் முழங்கால்படி யிட்டீர்கள்; அல்லது உங்கள் கரங்களை உயர்த்தினீர்கள் என்பதைப் பொறுத்ததாயிருக்கிறது. அது நீங்கள் என்ன நினைத்தீர்கள்! தேவனைக் குறித்து என்ன நினைத்தீர்கள் என்பதைப் பொறுத்ததா யிருக்கிறது. 50நாம் ஜெபிப்பதற்கு முன், இன்னும் கொஞ்சம் பேர் கரங்களை உயர்த்துவீர்களா? தேவன் வேண்டும் என்று தேவையுள்ளோர் யாவரும், இன்னும் வேறு எதுவானாலும், நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தி, “தேவனே, என் மேல் இரக்கமாயிரும்; நீர் எனக்கு தேவையாயிருக்கிறீர்”, என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்கள் மீது இரக்கமாயிருப்பாராக! இப்பொழுது இதை சிந்தித்துப் பாருங்கள்; ஒரு வேளை இது உங்களுடைய கடைசித் தருணமாக இருக்கலாம். கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவோ அல்லது அதற்கு மறுநாள் இரவோ வானத்தில் தோன்றின ஸ்பூட்னிக் (Sputnik), அதாவது சுவற்றில் தோன்றின கையெழுத்து' என்பதின் பேரில் பேச இருக்கிறேன், அது காலத்தின் முடிவின் நெருக்கத்தில் தேவன் காட்சியில் வந்திருக்கிறதைக் காண்பிக்கிறது. எனக்காக சிந்தப்பட்டது, உம்மண்டையில் வரும்படிக்கு நீர் அழைக்கிறீர், ஒரு வேளை இது தாமே இரக்கத்திற்கும் நியாயத்தீர்ப்புக்கும் மத்தியிலிருந்து உம்மை பிரிக்கிற கடைசி மணி வேளையாக இருந்தால் என்னவாயிருக்கும்? நான் வருகிறேன்,... நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? நான் வருகிறேன் ... “தேவனே என்மேல் இரக்கமாயிரும்”. அங்கே பின்னால் உம்முடைய கரங்களை கீழே இறக்கினபடி அழுது கொண்டு இருக்கும் வாலிப நபரே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஒரு வயதான , தாயினுடைய அநேக ஜெபங்கள் உனக்காக ஏறெடுக்கப்பட்டிருப்பதில் எந்த ஒரு சந்தேகமு மில்லை. தேவன் உன் ஜெபத்தை கேட்டிருக்கிறார். அவர் உன்னை பார்த்தார். அவர் உன் அருகில் நின்றுக்கொண்டிருக்கிறார். உன்னுடைய கரங்களை உயர்த்தும்படிக்கு கூறினது அவர் தான். 51நாம் ஜெபிப்பதற்கு முன், இன்னும் வேறு யாராவது இருக்கிறீர்களா? வாலிபனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரியாக வரிசையில் ஒரு வாலிப பெண் தன்னுடைய கரங்களை உயர்த்தினதை நான் கவனித்தேன். இங்கே வரிசையில் உட்கார்ந்திருக்கும் மூன்று வாலிபர்களும், அதே வரிசையில் விடப்பட்டு இருக்கும் இன்னொரு நபரும், கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்படிக்கு தங்கள் கரங்களை உயர்த்தாமல் இருக்கிறார்கள். இப்பொழுதே, “ஓ, தேவனே, ஒரு உண்மையான காரியத்தை எனக்குள் உருவாக்கும்”, என்று கூறுங்கள். ஒருவேளை நீங்கள் ஒரு சபையை சேர்ந்தவராயிருக்கலாம். ஓ, நண்பனே, ஒரு சபையை சேர்ந்திருப்பது அருமையானது தான், ஆனால் நீங்கள் மறுபடியும் பிறக்காவிட்டால், நீங்கள் இழக்கப்பட்டுப்போனீர்கள். பாருங்கள். அதை நினைத்துப் பாருங்கள். இயேசு ஜெயங் கொண்டார்; எனவே, நீங்களும் யுத்தத்தில் போரிடும்படிக்கு உங்களுடைய கரத்தில் ஒரு காரியத்தை அவர் கொடுத்துள்ளார். நாம் ஜெபிப்பதற்கு முன், இப்பொழுது மறுபடியும் நீங்கள் சரியான முடிவை எடுத்திருக்கிறீர்கள் என்று நிச்சயமுடையவர்களாய் இருங்கள். நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தியிருப்பீர்களானால், அவ்விதமாய் நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அவ்விதமில்லையா?... இங்கே இருக்கிற இந்த சிறிய சீமாட்டியை தேவன் ஆசீர்வதிப்பாராக. தேனே, ஆசீர்வதிப்பாராக. சரிதான். அங்கே பின்னால் அதற்கும் பின்னால், ஆம், ஒரு சிறிய வாலிப பெண் இருக்கிறாள். அன்பான சகோதரியே, தேவன் உங்களுக்கு அருமையானவராக இருப்பாராக. இப்பொழுது, நாம் உண்மையிலேயே பயபக்தியோடு நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருப்போம். நான் சகோதரன் செருல்லோவை (Brother Cerulo) இங்கே வந்து எனக்காக இந்த ஜெபத்தை ஏறெடுக்க வேண்டும் என்று கேட்கப்போகிறேன். என்னுடைய தொண்டை கரகரப்பாகிக் கொண்டுபோகிறது. ஒவ்வொருவரும் உங்களுடைய தலைகளை தாழ்த்தியிருக்கட்டும். இப்பொழுது ஜெபியுங்கள். தேவன் உங்களோடு கூட இருப்பாராக.